Health & Lifestyle

Wednesday, 08 September 2021 08:44 PM , by: Elavarse Sivakumar

உடலுக்குத் தேவையான புரதம் மற்றும் கால்சியத்தை அளிக்கும் சிறந்த உணவுகளில் முக்கியமானது முட்டை. ஆனால் இந்த முட்டையை ஃபிரிட்ஜில் வைப்பதால், இத்தனைப் பக்கவிளைவுகளை நாம் எதிர்கொள்ள நேரிடும் என்பதை சிந்திக்க மறக்காதீர்கள்.

முட்டையின் முக்கியத்துவம் (The importance of the egg)

தினசரி நம் உணவில் முட்டைகளை எடுத்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.நம்மில் பெரும்பாலானோர் ஃபிரிட்ஜில் முட்டைகளை சேமித்து வருகிறோம்.

இதற்காகக் கிட்டத்தட்ட அனைத்து ஃபிரிட்ஜ் உற்பத்தி நிறுவனங்களும் அவற்றின் வெளியீடுகளில் முட்டை வைப்பதற்கென்றே தனியாக ஒரு ட்ரே(Tray)வை வழங்குகின்றன.

ஆரோக்கியத்திற்குக் கேடு (Harm to health)

ஆனால் ஒரு ஆய்வின்படி, ஃபிரிட்ஜில் சேமித்து வைக்கப்படும் முட்டைகள் சாப்பிடுவதற்கு ஆரோக்கியமற்றவை என தெரியவந்துள்ளது. குளிர்ந்த நிலையில் முட்டைகளைச் சேமித்து வைப்பதும்,பின்னர் அவற்றை அறை வெப்பநிலையில் விட்டுவிடுவதும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாக்டீரியாக்கள் வளரும் (Bacteria grow)

மேலும் குளிர்ந்த நிலை முட்டை ஓட்டில் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். பின்பு இது முட்டையின் கருவிலும் பரவக்கூடும் என்பதால் உண்பதற்கு ஆரோக்கியமற்றதாகிவிடும் என அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

முட்டைகளைக் குளிரூட்டுவதன் மூலம் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாவின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த இயலும். மேலும் , முட்டைகள் கெட்டுப் போகாமல் இருப்பதோடு, சால்மோனெல்லா எனப்படும் தூண்டப்பட்ட உணவு விஷத்தைப் பெறுவதற்கான அபாயத்தையும் குறைக்கிறது என்று நீண்ட காலமாக நம்பப்பட்டு வந்தது.

ஆனால் இந்த புதிய ஆய்வு முற்றிலும் நேர்மறையாக ஒரு தகவலை தெரிவித்துள்ளது. அதிலும், அறை வெப்பநிலையில் முட்டைகள் சிறந்த முறையில் சேமிக்கப்படுகின்றன என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். முட்டைகளை மிகவும் குளிரான வெப்பநிலையில் சேமிப்பது, அதாவது குளிர்சாதன பெட்டியில் வைப்பது அவற்றைச் சாப்பிட முடியாததாக மாற்றும் என தெரிவித்துள்ளனர். கோழி முட்டையிடும் போது அதன் ஓடுகளில் சால்மோனெல்லா பாக்டீரியாக்கள் உருவாவது இயல்பானது தான்.

உள்ளே நுழையும் பாக்டீரியாக்கள் (Bacteria that enter)

இதனால் முட்டைக் கெடாமல் இருக்க ஏதுவாக, அதனைக் குளிர்சாதன பெட்டிகளில் வைப்பதன் மூலம் சில பாக்டீரியாக்களின் இனப்பெருக்கம் வளர்ச்சியையும் திருப்பத்தையும் ஏற்படுத்தி, அவை முட்டைகளின் உட்புறங்களில் நுழைய வழிவகை செய்கிறது.

நோய் ஆபத்து (Risk of disease)

இதன் விளைவாக அவை உடலுக்குத் தீங்கு விளைவிப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் குடல் மற்றும் வயிறு சம்பந்தமான நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது. சாதாரண அறை வெப்பத்தில் இந்த பாக்டீரியாவால் இனப்பெருக்கம் செய்ய முடியாமல்,அவை இறந்துவிடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எனவே, பல ஆய்வுகளின்படி சிறந்த உட்கொள்ளலுக்கு அறை வெப்பநிலையில் முட்டைகளை வைக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது. அறை வெப்பநிலையில் சேமிக்கப்படும் முட்டைகள் குளிரூட்டப்பட்டதை விட வேகமாக அழுகாது. சிறந்த சுவையைத் தரும்.

2 நாட்கள் (2 days)

இருப்பினும் நீங்கள் முட்டைகளை அதிக காலத்திற்கு அரை வெப்பநிலையிலோ அல்லது பிரிட்ஜிலோ வைத்திருக்கக்கூடாது. வாங்கிய அனைத்தையும் ஒன்றிரண்டு நாட்களிலேயே சமைத்துவிட முயற்சித்தால் நல்லது.

எனவே இனியாவது முட்டையை ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்ப்போம். நோய்களுக்கு நோ என்ட்ரி போடுவோம்.

மேலும் படிக்க...

நெருங்கும் கொரோனா 3- வது அலை- தடுப்பூசி போடாதவர்களுக்கு ஆபத்து!

அச்சச்சோ மீண்டும் கட்டுப்பாடுகளா? கொரோனாவை விரட்ட புதியத் திட்டம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)