பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 7 March, 2022 8:01 AM IST

உடற்பயிற்சிக்கு அதிக நேரம் செலவிட முடியாதவராக நீங்கள்?
அப்படியானால் உங்களுக்கு இந்த டயட் பெரிதும் கைகொடுக்கும். உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் சாதாரண கோதுமை மாவுக்குப் பதிலாக பார்லி மாவு, தினை மாவு, சோயா மாவு, ரவை மாவு போன்றவற்றைப் பயன்படுத்தத் தொடங்குவார்கள். அத்தகைய ஆரோக்கியமான விருப்பங்களில் ஒன்று ராகி.

சத்துக்கள் நிறைந்தது

இதன் சிறந்த அம்சம் என்னவென்றால், ராகி மாவில் கொலஸ்ட்ரால் மற்றும் சோடியத்தின் அளவு பூஜ்ஜியமாக உள்ளது, அதே நேரத்தில் கொழுப்பு உள்ளடக்கம் 7 ​​சதவீதமாக உள்ளது. இது தவிர, நார்ச்சத்து, கால்சியம், புரதம், பொட்டாசியம், இரும்புச்சத்து போன்றவை இதில் ஏராளமாக உள்ளன. புரதம் மற்றும் நார்ச்சத்து காரணமாக, எடை இழப்புக்கு இது சிறந்ததாக கருதப்படுகிறது. இது தவிர ராகியில் பல நன்மைகள் உள்ளன.

சர்க்கரை நோய்

கோதுமை அல்லது அரிசி மாவுடன் ஒப்பிடும்போது, ​​ராகியில் பாலிபினால்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. ராகியை காலை உணவு அல்லது மதிய உணவில் சேர்த்துக்கொள்வதே நல்லது. நீங்கள் எதிர்பார்க்காத வகையில் அதிளவில் பலன் தரும்.

இரத்த சோகை

ராகி இரும்பு சத்தின் சிறந்த மூலமாகும், எனவே ஒருவருக்கு இரத்த சோகை இருந்தால் அல்லது உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால், அவர் ராகியை உட்கொள்ளலாம்.

புரதப் பற்றாக்குறை

ராகியில் உடலுக்குத் தேவையான அமினோ அமிலங்கள் மற்றும் புரதங்கள் நிறைந்துள்ளன. சைவ உணவு உண்பவர்களின் உணவில் புரோட்டீன் மூலங்கள் பெரும்பாலும் இல்லை. அத்தகைய சூழ்நிலையில், புரத பற்றாக்குறையை சமாளிக்க அவர்கள் ராகியை உட்கொள்ளவது நல்லது.

மன அழுத்தம் குறைய

ராகியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இது மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

மேலும் படிக்க...

200 ஆடுகள், 2500 கிலோ பிரியாணி- சுடச்சுட பிரியாணிப் பிரசாதம்!

புதியக் காற்றழுத்த தாழ்வு மண்டலம்- சென்னைக்கு ஆபத்து!

English Summary: Rocky to help you lose weight!
Published on: 07 March 2022, 08:00 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now