வீட்டிலிருந்தே குளியலுக்கான குளியல் பொடியைத் தயார் செய்ய முடியும். குளியல் பொடி செய்யத் தேவையான பொருட்கள்; உலர்ந்த மகிழம் பூ பொடி, கோடைக்கிழங்கு பொடி, உலர்ந்த சந்தனத் தூள், கஸ்தூரி மஞ்சள் பொடி, கிச்சிலி கிழங்கு பொடி ஆகியன ஆகும்.
மேற்குறித்த ஐந்து பொடிகளில் உலர்ந்த மகிழம்பூ பொடி 200 கிராம் அளவிலும், உலர்ந்த சந்தனத் தூள் 150 கிராம் அளவிலும், ஏனைய மூன்று பொடிகளையும் தலா 100 கிராம் என எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை ஒன்றோடொன்று நன்றாக்க் கலந்து கொள்ள வேண்டும். மேலும் இந்த கலவையைச் சிறிது பன்னீர் விட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த அரைத்த கலவையைச் சிறியச் சிறிய வில்லையாக தட்டி நிழலில் உலர விட்டு எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த காய்ந்த வில்லைகளைக் குளிப்பதற்கு முன் அரைமணி நேரத்திற்கு முன்னர் பாலில் இட்டுக் குழைத்து முகத்தில் பூசிக் கொண்டு அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விடலாம். இதனை உடல் முழுதும் குளிக்கும் போது பயன்படுத்தலாம்.
மற்றுமொரு குளியல் பொடி தயாரிக்க, சோம்பு 100 கிராம், அகில் கட்டை 200 கிராம், சந்தனத் தூள் 300 கிராம், கஸ்தூரி மஞ்சள் 100 கிராம், கார்போக அரிசி 200 கிராம், கோரைக்கிழங்கு 200 கிராம், பாசிப்பயிறு 500 கிராம் ஆகியவற்றை நன்கு பொடி செய்து ஒன்றோடொன்று கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். அந்த கலவையைத் தினமும் குளிக்கப் பயன்படுத்தலாம்.
இந்த கலவையைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் தேமல், கரும்புள்ளி, வேர்க்குரு, கண்களில் உள்ள கருவளையம், முகப்பரு, கருந்திட்டு, படர்தாமரை ஆகிய பிரச்சனைகள் எளிதில் குணமாகும். உடல் பொலிவு கூடும். சருமம் மிருதுவாக மாறும். இந்த குளியல் பொடியைப் பெரியவர், சிறியவர் என அனைவரும் பயன்படுத்தலாம்.
தற்பொழுது சோப்புகளாலூம், பவுடர்களாலும் சருமம் பல பாதிப்புகளை அடைகிறது. தோல் வறட்சி நிலையினை அடைகிறது. இது போன்ற பிரச்சனைகளுக்கு இயற்கையாக எந்த வகை பக்க விளைவுகளும் இன்றி இருக்கும், குளியல் பொடி. இயற்கையாக கிடைக்கும் பொருட்களை முகத்தில், உடலில் பயன்படுத்தினால் தகுந்த பலனைப் பெறலாம்.
மேலும் படிக்க