பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 2 June, 2023 5:22 PM IST
So many benefits of onion skin! Find out now!!

வெங்காயம் பெரும்பாலான உணவு பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், வெங்காயத்தைப் பற்றி பலரும் அறியாத பல விஷயங்கள் உள்ளன. அவை குறித்து இப்பகுதியில் பார்ப்போம்.

பெரும்பாலான மக்கள் வெங்காயத் தோலைப் பயனற்றது என்று எண்ணி தூக்கி எறிந்து விடுகிறார்கள். இருப்பினும் வெங்காயத்தின் தோல் பல பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது. வைட்டமின் ஏ நிறைந்த வெங்காய தேநீர் கண்களுக்கு நல்லது. இது சருமத்தின் தன்மையையும் மென்மையையும் மேம்படுத்துகிறது. தண்ணீர் காய்ந்ததும் வெங்காயத்தோல், சர்க்கரை, டீத்தூள் சேர்த்துக் குடிக்கலாம். இது சற்று வித்தியாசமான சுவை, ஆனால் இது உங்கள் கண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

நன்மைகள்:

  • வெங்காயத் தோலில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது பல்வேறு தொற்று நோய்களைத் தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
  • வெங்காயத் தோலை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி சூடாக குடிக்கவும். இவ்வாறு செய்தால் இதய பிரச்சனை நீக்கி உங்கள் ஆரோகியத்திற்கு உதவுகிறது.
  • வெங்காயத் தோலில் வைட்டமின் ஈ அதிகம் நிறைந்துள்ளது. இது உங்கள் சருமம் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது.
  • வெங்காய தேநீர், ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்தது.
  • இது நம்முடைய உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
  • மேலும் இது சருமத்திற்கும் மிகவும் நன்மை அளிக்கிறது.
  • இதற்கு வெங்காயத் தோலை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம்.
  • இதை தினமும் எடுத்துக் கொள்வது நல்லது.
  • இது தவிர, தலைமுடியைக் கழுவுவதற்கு முன் வெங்காயத் தோலை தண்ணீரில் ஊற வைக்கவும்.
  • இந்த நீரில் ஒரு மணி நேரம் கழித்து தலையை அலசி வந்தால் முடி உதிர்வு பிரச்சனைகளை முற்றிலும் தடுக்கலாம்.
  • வெங்காயத் தோலை தண்ணீரில் கொதிக்கவைத்துக் கொப்பளித்தாலோ அல்லது தேநீரில் கொதிக்க வைத்து குடித்தாலோ, தொண்டை புண் மற்றும் பிற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
  • வெங்காயத் தோலில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.
  • கூடுதலாக, இதில் உள்ள ஃபிளாவனாய்டுகள், குர்குமின் மற்றும் பினாலிக் ஆகியவை வீக்கம் மற்றும் புற்றுநோயைத் தடுக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க

நீரிழிவு நோய் முதல் அல்சர் தீர்வு வரை! பிரண்டையின் அற்புதமான நன்மைகள்!!

மட்டன் ரோகன் ஜோஷ் மெய்மறக்கும் சுவையில்!

English Summary: So many benefits of onion skin! Find out now!!
Published on: 02 June 2023, 05:22 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now