Health & Lifestyle

Friday, 16 July 2021 05:24 PM , by: Aruljothe Alagar

Eggs

1. வெள்ளை மற்றும் மஞ்சள் கரு இரண்டிற்கும் ஒரே அளவு புரதம் உள்ளதா?

இந்த உண்மை நிச்சயமாக நம்மை ஆச்சரியப்படுத்தியதும். முட்டையின் வெள்ளை மற்றும் முட்டையின் மஞ்சள் கரு இரண்டிலும் தலா 3 கிராம் புரதம் மட்டுமே உள்ளது. எனவே, பாரம்பரியமாக முட்டையின் வெள்ளைக்கருவை புரதத்துடன் தொடர்புபடுத்தும்போது, மஞ்சள் கருவில் அதிகம் நன்மை இருப்பதாக கூறுவார்கள். இருப்பினும், முக்கிய வேறுபாடு கலோரிகளில் உள்ளது. ஒரு மஞ்சள் கருவில் 60 கலோரிகளுக்கு 3 கிராம் புரதம் இருக்கும்போது, ஒரு முட்டை வெள்ளை உங்களுக்கு 15 கலோரிகளுக்கு 3 கிராம் புரதம் இருக்கிறது. முட்டையின் மஞ்சள் கருவில் நல்ல நுண்ணூட்டச்சத்துக்கள் அதிக அளவில் இருப்பதால், அவற்றை உண்ணலாம்.

2. அனைத்து முட்டைகளும் சுரப்பிகள் இல்லாததா?

நாம் காணும் விளம்பரங்களில் முட்டைகளில் சுரப்பிகள் இல்லை என்று கூறி விளம்பர படுத்துகிறார்கள். ஆனால் இயற்கையாகவே முட்டைகளில் சுரப்பிகள் இல்லை. இவ்வாறு கூறுவது தண்ணீர் ஈரமாக இருக்கிறது என்று கூறுவது போலாகும். ஏனென்றால் 1950 களில் அனைத்து கோழி உற்பத்தியிலும் சுரப்பிகளைப் பயன்படுத்துவதை எஃப்.டி.ஏ தடை செய்தது. எனவே, எந்த கோழி முட்டைகளிலும் சுரப்பிகள் இருக்காது.

3.முட்டைகள் நீல நிறமாக இருப்பதற்கான காரணம் என்ன?

நீங்கள் எப்போதாவது ஒரு நீல நிற முட்டையைப் பார்த்தீர்களா? இந்த முட்டைகள் நீல நிறத்தை எவ்வாறு பெற்றன என்பதற்குப் பின்னால் ஒரு கதை இருக்கிறது. ஒரு ஆய்வின்படி, 500 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு வைரஸ் தென் அமெரிக்க கோழிகளை பாதித்தது. இந்த தொற்றுநோயானது மரபணு மாற்றத்தால் விளைந்தது,இதனால் இறுதியில் கோழிகள் நீலம் மற்றும் பச்சை முட்டைகளை இடக் காரணமாக அமைந்தது.

4. ஒரு முட்டை ஷெல் எவ்வளவு தடிமனாக இருக்கிறது என்பது முட்டையிடும் கோழியின் வயதைப் பொறுத்ததா?

பழுப்பு நிற முட்டைகளில் வெள்ளை முட்டைகளை விட அடர்த்தியான ஓடுகள் உள்ளன என்பது தவறான கருத்து. உண்மையில், ஒரு முட்டை ஓட்டின் தடிமன் கோழியின் வயதை மட்டுமே சார்ந்துள்ளது. இளம் கோழிகள் தடிமன்னான ஓடுகளோடு முட்டையிடும், பழைய கோழிகள் மெல்லிய ஓடுகளுடன் முட்டையிடுகின்றன.

மேலும் படிக்க:

முழுக்க முழுக்கப் பலன் தரும் முட்டை ரசம்- தெரியுமா உங்களுக்கு?

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)