மாதவிடாய் காலங்கள் வலிமிகுந்ததாக இருக்கலாம். அதை மறுக்கவோ, தடுக்கவோ முடியாது. மாதவிடாய் காலத்தில் பெண்கள் அசௌகரியம் மற்றும் வலியைக் காண்பது பொதுவானது. இருப்பினும், வலியின் தீவிரம் மாறுபடலாம். சிலர் மந்தமான மற்றும் லேசான வலியைக் கண்டாலும், அதை குறிப்பிட்ட சிலருக்குத் தாங்க முடியாத வலியாக இருக்கிறது.
நீங்கள் ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் வலிகளால் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால், பயனுள்ள முடிவுகளுக்குபல்வேறு வீட்டு வைத்தியங்களைச் செய்து வலியில் இருந்து விடுபடலாம்.
நீரேற்றத்துடன் இருப்பது மற்றும் தண்ணீர் குடிப்பது முக்கியமான செயல் ஆகும். ஏனெனில் இது வலியின் அதிகரிப்பைச் சமாளிக்க உதவுகிறது. வலியற்ற மாதவிடாய் பெறுவதற்கான தீர்வுகள் கீழே கொடுக்கபப்டுகின்றன.
யோகாசனம்
மாதவிடாய் வலிகளைச் சமாளிக்க யோகா உங்களுக்கு உதவும். மாதவிடாய் காலத்தில் செய்யக்கூடிய பல ஆசனங்கள் வலியைப் போக்க உதவும். கௌமுகாசனம், புஜங்காசனம் மற்றும் ஜானு சிர்சாசனம் போன்ற சில ஆசனங்கள் வலியைக் குறைக்க பயன்படும் ஒரு நல்லமுயற்சி ஆகும்.
ஊறவைத்த திராட்சை மற்றும் கேசர்
மாதவிடாய் வலியைப் போக்க இது மிகவும் பயனுள்ள வீட்டு வைத்தியம் ஆகும். நீங்கள் 3-4 திராட்சைகளை ஊறவைத்து, காலையில் சிறிது கேசருடன் (குங்குமப்பூ) சாப்பிட வேண்டும். இது பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் பரிந்துரைத்த ஒரு தீர்வு ஆகும்.
வாழைப்பழம்
வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன, ஆனால் அது மாதவிடாய் வலியைச் சமாளிக்க உதவும் என்பது உங்களுக்குத் தெரியுமா? வாழைப்பழத்தில் வைட்டமின் B6 மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது அதனால் வலியின் வீரியம் மற்றும் வலிப்பிடிப்புகளை சமாளிக்க உதவுகிறது.
சூடான தண்ணீர் ஒத்தனம்
வெப்பத்தின் பயன்பாடு வலியைக் கணிசமாகக் குறைக்க உதவுகிறது. சிறிது நிவாரணம் பெற, வெப்பமூட்டும் பாட்டில், சூடான துண்டு அல்லது சூடான தண்ணீர் பாட்டிலைப் பயன்படுத்தலாம். வெந்நீர் குளியல் கூடச் சிறந்த ஒரு தீர்வாக இருந்து உதவலாம்.
டார்க் சாக்லேட்
சிறிது டார்க் சாக்லேட் சாப்பிடுவது மாதவிடாய் வலிகளிலிருந்து விடுபடுவதாக அறியப்படுகிறது. டார்க் சாக்லேட்டுகளில் மெக்னீசியம் உள்ளது. இது தசைகளைத் தளர்த்தவும் வலியைக் குறைக்கவும் உதவுகிறது. ஒரு சில பாதாம் அல்லது பூசணி விதைகள் போன்ற மற்ற மெக்னீசியம் நிறைந்த உணவுப் பொருட்களையும் உட்கொள்ளலாம்.
மேலும் படிக்க
இனிப்புகளை உணவுக்கு முன்தான் சாப்பிட வேண்டும்? ஏன் தெரியுமா?