Health & Lifestyle

Monday, 27 September 2021 08:11 PM , by: R. Balakrishnan

The elderly falling down!

முதியவர்கள் கீழே விழுந்து காயமடைவது என்பது சாதாரணமான ஒரு நிகழ்வாக உள்ளது. முதியவர்களின் வாழ்க்கைத்தரத்தில் ஊனம் / திறனிழப்பை ஏற்படுத்துகிற முதன்மையான காரணங்களுள் கீழே விழுதல் ஒன்றாகும். சில நேரங்களில் உயிரிழப்பிற்கும் இது காரணமாக அமைகிறது.

தரைப்பரப்பு

உடைந்த, ஏற்ற இறக்கமான தரைப்பரப்பு, கீழே விழுதலில் 73%-க்கு காரணமாக இருக்கிறது. சில நேரங்களில் தரை அமைப்பிற்கு பயன்படுத்தப்பட்டிருக்கிற பொருளே பாதிப்பிற்கான முழு காரணமாக இருக்கக்கூடும். தக்கை மற்றும் ரப்பர் போன்ற மென்மையான பொருட்களிலான தரையமைப்பை நிறுவுவதை, முதுமைக்கு உகந்த வடிவமைப்பு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இறுக்காக பிணைக்கப்பட்டிருக்கின்ற தரைக்கம்பளங்கள் கீழே விழாமல் தடுப்பது மட்டுமின்றி, கீழே விழும்போது அதன் பாதிப்பு விளைவையும் குறைக்கின்றன.

குளியலறை

வயது முதிர்ந்தவர்கள் கீழே விழுவதற்கு இரண்டாவது மிக முக்கியமான காரணமாக குளியலறை இருக்கிறது. கூர்மையான மற்றும் உலோகத்திலான சாதன அமைப்புகளினால், குளியலறையில் கீழே விழுவது கடுமையான பாதிப்புகளுக்கு வழிவகுக்கும். ஆதரவிற்கு கைப்பிடிக் கம்பிகளை பொருத்துவது, தண்ணீரை உறிஞ்சுகிற மற்றும் வழுக்காத தரைப்பரப்பை அமைப்பது குளியலறையில் கீழே விழுவதை மிகவும் குறைப்பதற்கான வழிமுறையாகும். கூர்மையான முனைகளுக்குப் பதிலாக, வளைவாக இருக்கிற குழாய்களை அமைப்பதும், கீழே விழும் நேர்வில் காயங்கள் ஏற்படாமல் தடுப்பதற்கு உதவுமாறு சிங்க் வெளிப்புற பகுதியில் ரப்பர் விளிம்புகளைக் கொண்டு மூடுவதும் நல்லது.

சமையலறை

வழக்கமான சமையலறை வடிவமைப்புகள் இருக்குமானால் அதை சுத்தமாகவும், அடைசல் இல்லாமலும் ஒழுங்குமுறையாக வைத்துக் கொள்வதற்கு முதியோர் கூடுதல் முயற்சியை மேற்கொள்ள வேண்டியிருக்கும். முதுமைக்குகந்த வடிவமைப்பு வழிகாட்டல்கள், சமையலறையிலும் மற்றும் அதைச் சுற்றிலும் எளிதாக நடமாடவும், வேலை செய்யவும் முதியவர்களுக்கு உதவுகின்றன.

படுக்கையறைகள் முதியோரின் தேவைகளுக்கேற்ப சௌகரியமான உணர்வையும், உறக்கத்தையும் தூண்டக்கூடிய வகையில் படுக்கையறை இருக்க வேண்டும்.

Also Read : ஆன்டிபயாடிக் மருந்துகளை அதிகம் உட்கொண்டால் ஆபத்து!

தேவைப்படும் இடங்களில் கைப்பிடி கம்பிகள் / குழாய்களை நிறுவுவது, உயர்வாக இருக்கிற தரைப்பரப்புகளை சமதளப்படுத்துவது, படிக்கட்டுகள் இருப்பதற்கான குறியீடுகளை செய்வது ஆகியவை எளிய மாற்றங்களாகத் தோன்றக்கூடும். ஆனால், முதியோரின் வாழ்க்கையில் மிகப்பெரிய நேர்மறை தாக்கத்தை இவைகள் ஏற்படுத்தும்.

ஒளிவிளக்கு வசதியை போதுமான வெளிச்சம் இல்லாத நிலை, முதியோரின் வாழ்க்கையை ஆபத்தானதாக இருள் சூழ்ந்ததாக ஆக்கிவிடும். முதியவர்களின் பார்வைத்திறனுக்கு ஏற்றவாறு வீட்டில் வெளிச்சமும், விளக்கு வசதிகளும் இருப்பதை உறுதிசெய்ய சரியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

மேலும் படிக்க

புகைப் பழக்கத்தை கைவிட சில உளவியல் ஆலோசனைகள்

மணக்கும் மலர்களில் புதைந்துள்ள அற்புதமான மருத்துவப் பயன்கள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)