1. வாழ்வும் நலமும்

புகைப் பழக்கத்தை கைவிட சில உளவியல் ஆலோசனைகள்

R. Balakrishnan
R. Balakrishnan
Tips to Quit Smoking

புகைப்பழக்கம் கெடுதலானது என்பது தெரியாதவரல்ல நாம். ஆனாலும், ஏதேனும் ஒரு காரணத்தால் புகைப்பழக்கத்தை விட முடியாமலேயே தவித்துக் கொண்டிருப்போம். பல நேரம் முயற்சி செய்தும் தோல்வியடைந்து மீண்டும் அந்த சிகரெட்டிடமே சரணடைந்திருப்போம். இதுபோல் புகைப்பழக்கத்தைக் கைவிடுவதற்காக உளவியல் ஆலோசகர்கள் சொல்லும் எளிய ஆலோசனைகள் இவை. நம்பிக்கையுடன் முயற்சித்துப் பாருங்கள்.

எளிய ஆலோசனைகள்

எதற்காக இந்த பழக்கத்தைக் கைவிட நினைக்கிறீர்கள் என்பதை பட்டியல் போடுங்கள். அதை உங்கள் கண்களில் படும் பல இடங்களிலும் ஒட்டி வையுங்கள். அந்த லிஸ்ட்டின் பக்கத்திலேயே உங்கள் அன்புக்குரியவரின் புகைப்படத்தையும் மாட்டி வைப்பது கூடுதல் பலன்களைக் கொடுக்கும்.

உடற்பயிற்சிகள் செய்து உங்களை ஆக்டிவாக வைத்திருக்கும்போது, உடலில் சுரக்கும் இயற்கையான ரசாயனங்கள், ஸ்ட்ரெஸ்ஸைப் போக்கி, சிகரெட் பிடிக்கும் எண்ணத்தையும் குறைக்கும். வாக்கிங் செய்தாலே போதுமானது. உடலை அதிகம் வருத்திக் கொள்ளாமல் உங்களுக்குப் பிடித்த மாதிரியான எந்தப் பயிற்சியையும் செய்யலாம்.

தனியே உணவருந்துவதைத் தவிர்த்து குடும்பத்தாருடன் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். கூடிய வரையில் உங்களை பிசியாக வைத்திருப்பது சிகரெட் எண்ணத்திலிருந்து மீட்கும்.

சிகரெட் எண்ணம் தலைதூக்காமலிருக்க சுகர் ஃப்ரீ சூயிங்கம், கருப்பட்டி சேர்த்த மிட்டாய், நெல்லி வற்றல் என எதையாவது மெல்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இவற்றில் ஏதேனும் ஒன்றை எப்போதும் கையில் வைத்திருங்கள்.

உங்கள் மீதும், உங்கள் ஆரோக்கியத்தின் மீதும் அக்கறை உள்ள நபர்களுடன் அடிக்கடி பேசுங்கள். சிகரெட் எண்ணம் தலைதூக்கும்போது அவர்களுடன் பேசுங்கள்.

காபி மற்றும் டீ குடித்த உடன் சிகரெட் எண்ணமும் பலருக்கும் எழுவதுண்டு. தவிர காபியும், டீயும் உங்களை விழிப்பு நிலையிலேயே வைத்திருக்கும். அதன் மூலம் உங்கள் மனம் அலைபாயும். அதை அடக்க சிகரெட் பிடிக்கத் தோன்றும். அதனால் காபி, டீயை குறைத்துக் கொள்ளுங்கள்.

மன அழுத்தம் அதிகரிக்கும்போது சிகரெட் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் எழலாம். எனவே, நெகட்டிவ் உணர்வுகளிலிருந்து உங்களை மீட்கும் சூழலைத் தேர்ந்தெடுங்கள்.

எந்த ஒரு விஷயத்தையும் பழக 21 நாட்கள் அவசியம். முதல் 3 வாரங்களை நீங்கள் வெற்றிகரமாகக் கடந்துவிட்டீர்கள் என்றால் பாதி வெற்றி அடைந்துவிட்டதற்குச் சமம். அந்த 3 வார காலம்தான் உங்களுக்குப் போராட்டமானவை. அதன்பிறகு நீங்கள்தான் வெற்றியாளர்.

புகைக்கத் தோன்றினால் உடனே கிளம்பி, புகைக்க வாய்ப்பில்லாத இடத்துக்குச் செல்லுங்கள். உதாரணத்துக்கு நூலகம், கடைகள் போன்றவை. அந்த இடம் அதிகப் பரபரப்பாகவும், ஆள் நடமாட்டம் அதிகமுள்ளதாகவும் இருந்தால் உங்கள் சிகரெட் எண்ணம் மாற வாய்ப்புண்டு. ஆரோக்கியமான நொறுக்குத்தீனியை உண்பது சிகரெட் மீதான வேட்கையைத் தணிக்கும். இதேபோல் குளிர்ந்த நீரானது மூளையில் டோபமைன் என்ற ரசாயனத்தை சுரக்க வைக்கும். இதனால் மோசமான மனநிலை உடனே மாறும். எனவே, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகுங்கள்.

மேலும் படிக்க

மைதா கெடுதல் விளைவிக்கும் என்று சொல்வது ஏன்?

மருத்துவக் குணங்கள் நிறைந்த ஓமத்தின் பயன்கள்!

English Summary: Some Psychological Tips to Quit Smoking Published on: 24 September 2021, 07:37 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.