சிறுதானியங்களில் முக்கியமான ஒன்று ராகி. கேழ்வரகு, ஆரியம், கேப்பை என்று பல பெயர்களால் அழைக்கப்படும் ராகியின் சத்துக்களோ ஏராளம்,மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும். ஆரோக்கியக் குறைபாடுகளை பூர்த்தி செய்ய வேண்டுமானால், ராகியை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்வது நன்று.
பாலுக்கு பதிலாக ராகி மால்ட் பயன்படுத்தப்படுகிறது. ராகியை நீரில் ஊறவைத்து அதில் இருந்து எடுக்கப்படும் பாலின் சக்தி, மாட்டுப் பாலில் உள்ள சத்துக்களுடன் போட்டி போட கூடியது.
ராகியில் இருக்கும் அதிகளவிலான கால்சியம் எலும்பு, பற்கள் என அனைத்துக்கும் நல்லது. கோடை காலத்தில் கேழ்வரகை சாப்பிட்டால் உடல் சூடு தணியும், குளிர்ச்சியாக வைத்திருக்கும். புரதச்சத்துக்களும் கனிமச் சத்துக்களும் நிறைந்த ராகியை அடிக்கடி உட்கொண்டால், தொப்பை உள்ளவர்களின் தொப்பை கரைந்து, தட்டையான வயிறைப் எளிதில் பெறலாம்.
ராகியில் உள்ள ட்ரிப்டோஃபேன் (Tryptophan) என்ற அமினோ அமிலம், பசி உணர்வை குறைத்து, உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவியாக உள்ளது. உடலில் சேதமடைந்த திசுக்களை மேம்படுத்தவும், உடலின் நைட்ரஜன் நிலையை சமன்படுத்தவும், ராகி முக்கிய பங்கு வகிக்கிறது. கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ள ராகி எலும்புகளை வலுப்படுத்தும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக ராகி உள்ளது. இதிலுள்ள, தாவர வகை ரசாயன கலவைகள் (Phytochemical Compounds) சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துகிறது. லெசித்தின் (Lecithin) மற்றும் மெத்தியோனைன் (Methionine) போன்ற அமினோ அமிலங்கள் கல்லீரலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை வெளியேற்றி, உடலில் தேங்கும் தேவையற்ற கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது.
ராகியில் உள்ள இரும்புச்சத்து ரத்தசோகை நோயை போக்குகிறது. ராகியை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால், உடலின் சூடு தணியும். ராகி உயர் இரத்த அழுத்தம், கல்லீரல் நோய்கள், இதய நோய், ஆஸ்துமா நோய்களை குணப்படுத்தும். தினசரி ஒரு கோப்பை கேப்பைப்பால் குடித்து வந்தால், குழந்தைகளுக்கு முலைப்பால் கொடுக்கும் பெண்களுக்கு பால் நன்கு சுரக்கும்.
ராகியில் அதிக அளவில் நார்சத்து காணப்படுகிறது. மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு அடிக்கடி ராகியை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சினைகள் தீரும்.
தமிழ்நாட்டின் கிராமங்களில் மிகவும் சிறப்பான உணவுகளில் ஒன்று தான் களி. களிகளில் மிகவும் பெயர்பெற்றது ராகிக் களி. ராகிக் களியை தினசரி காலை உணவாக உட்கொண்டு வந்தால் ஆரோக்கியம் மேம்படும். மருத்துவமனை செல்ல கூடிய அவசியம் ஏற்படாது.
மேலும் படிக்க:
காளான் விரும்பிகள் சாப்பிடுவதற்கு முன் தெரிந்துக் கொள்ள வேண்டிய விளைவுகள்.
பரங்கிக்காயில் ஏராளமான நன்மைகள் உள்ளது என்று தெரியுமா?
Dates With Milk Benefits: நினைத்து பார்க்க முடியாத நன்மைகள் தரும்: பால்-பேரீச்சம்பழம் ஜோடி