Health & Lifestyle

Monday, 31 May 2021 03:36 PM , by: Sarita Shekar

Benefits of Sprouted Grains

நாம் உண்ணும் உணவு நம் ஆரோக்கியத்திற்கு அடிப்படை. ஆரோக்கியமே நமது வாழ்க்கைத் தரத்தை தீர்மானிக்கிறது மேலும் நம் வாழ்வில் சுவையூட்டுகிறது.

முளைகட்டிய தானியங்கள் நம் ஆரோக்கியத்திற்கு செய்யும் நன்மைகள் தெரிந்தால், தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதை யாரும் தவற விடமாட்டார்கள்.
முளைகட்டும்போது தானியங்களில் உள்ள  வைட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்கள் அதிகரிக்கிறது. தானியங்களில் உள்ள வைட்டமின் ஏ அளவு இரட்டிப்பாகிறது. புரதங்கள் எளிதில் ஜீரணமாகும்.

முளைத்த தானியங்கள்,  நம் உடலுக்கு போதுமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் (antioxidants)  இருப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

நாம் பெரும்பாலும் சமைத்த தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை சாப்பிடுகிறோம். அவற்றை  முளைகட்டிச்  சாப்பிடுவதன் மூலம் பல கூடுதல் ஊட்டச்சத்துக்களைப் பெறலாம்.

நல்ல ஆரோக்கியத்திற்கு அவசியமான வைட்டமின் சி, முளைகட்டிய பருப்பு வகைகள் மற்றும் தானியங்களில்  அதிகம் இருக்கிறது,  மேலும் இது சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றவை .

இரும்பு, புரதம், கால்சியம், நார்ச்சத்து மற்றும் பல்வேறு ஊட்டச்சத்துக்களால் முளைத்த கொண்டைக்கடலையை நீங்கள் சாப்பிட்டால் மருத்துவரைப் பற்றி சிந்திக்க வேண்டிய அவசியமில்லை.

கம்பு, மிகச் சிறந்த தானியமாகும். சத்துக்குறைபாடுள்ளவர்கள் உடலை வலுப்படுத்த முளைகட்டிச் சாப்பிடலாம். முளைத்த கம்பு உடல் வெப்பத்தை குறைக்கிறது மேலும் வயிற்று புண் மற்றும் மலச்சிக்கல் பிரச்சினைகளையும் சரிசெய்கிறது.

பொதுவாக நாம் உணவில் நேரடியாக எடுத்துக் கொள்ளாத ஒரு பொருள் வெந்தயம். ஆனால் வெந்தயத்தில் இருக்கும் சத்துக்கள் அளவிட முடியாதவை. அதிலும், முளைகட்டிய வெந்தயத்தில் வைட்டமின் சி, புரோட்டீன், நியாசின், பொட்டாசியம், இரும்புச்சத்து  போன்றவை இருக்கின்றன. 

முளைகட்டிய வெந்தயத்த்தை தினசரி உணவில் சேர்ப்பதால் நீரிழிவு நோய் அண்டாது. அதில் உள்ள மூலக்கூறுகளால் உடலில் இன்சுலின் சுரப்பு அதிகரிக்கும். அதனால் இது, சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதம்.

உடலில் கெட்ட கொழுப்புச் சத்து சேராமல் பார்த்துகொள்ளும் வெந்தயம், தொப்பையையும் குறைக்கும், உடல் எடையையும் குறைக்கும்.  

வைட்டமின் ஏ, பி மற்றும் சி ஆகியவற்றால் நிரம்பியது கொள்ளு.  கொள்ளுப்பயறை முளைகட்டிச் சாப்பிட்டால் தொப்பை, உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் ஓடிப்போகும். நரம்பு, எலும்புக்கு ஊட்டமளிக்கும் கொள்ளுப்பயறாஇ சாப்பிட்டால், மூட்டுவலி குறையும். 

அதேபோல, உளுந்தை முளைக்கட்டி சாப்பிட்டால் மூட்டுவலியைப் போக்கும். சர்க்கரை நோயாளிகளும் முளைகட்டிய உளுந்தை சாப்பிடலாம். தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் வல்லமை முளைகட்டிய உளுந்துக்கு உண்டு.

முளைகட்டிய பாசிப்பயறில் புரதமும் கால்சியமும் நிறைந்துள்ளது. ஊட்டம் தரும் முளைகட்டிய பாசிப்பயறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், அல்சரைக் குணப்படுத்தும்.

முளைகட்டிய தானியங்களை தினமும் நம் உணவில் சேர்த்துக் கொண்டால், உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல, மன ஆரோக்கியமும் மேம்படும்.

மேலும் படிக்க..

உளுந்தி ன் மருத்துவப் பயன்கள் - அறிந்து கொள்வோம்

பயறுகளை முளைகட்டி உண்பதால் கிடைக்கும் நன்மைகள்!

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)