1. வாழ்வும் நலமும்

உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் வெள்ளரிக்காய்: தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

KJ Staff
KJ Staff

வெள்ளரிக்காயில் தாதுப் பொருட்களான சோடியம், கால்சியம், மக்னீசியம், இரும்பு சத்து, பாஸ்பர்ஸ், கந்தகம், சிலிகன், குளோரின், ஆகியவை உள்ளது. இதில் 95% நீர் சத்து உள்ளது. கெட்ட நச்சுபொருட்களை சிறுநீரகம் வழியாக வெளியேற்றி உடலை ஆரோக்கியமாக வைக்கிறது.

வெள்ளரியின் நன்மைகள்

வாய் துறுநாற்றம்

வாயில் துறுநாற்றம் ஏற்பட்டால் வெள்ளரிக்காயை சாப்பிட்டு வரவும். இதனால் துறுநாற்றம் ஏற்பாடு குறையும். மேலும் ஈறுகளுக்கும் நல்லதாகும், ஈறுகளில் ஏற்படும் வலி,வீக்கம் மற்றும் இரத்த கசிவு குறையும்.

எடை மற்றும் வயிற்று கொழுப்பு

வெள்ளரிக்காய் உடல் எடையை கட்டுப்படுத்துகிறது. தேவையற்ற கலோரிகளை குறைத்து எடை அளவை கட்டுப்பாட்டில் வைப்பதோடு, வயிற்றில் கொழுப்பை கரைக்கிறது. இதனால் தொப்பை இருப்பவர்கள், பருமனாக இருப்பவர்கள் தினமும் வெள்ளரிக்காய் சாப்பிட்டு வாருங்கள். சிறந்த பலன் கிடைக்கும்.

குளிர்ச்சி மற்றும் செரிமானம்

வெள்ளரிக்காயில் குளிர்ச்சி தண்மை உள்ளதால் உடம்பில் உள்ள வெப்பத்தை சமப்படுத்த உதவுகிறது, மற்றும் செரிமானப் பிரச்சனை இருப்பவர்கள் தினமும் வெள்ளரிக்காய் சாப்பிட்டு வந்தால் ஜீரண சத்தி சீராகும். 

மலச்சிக்கல்

மலச்சிக்கல் பிரச்சனைக்கு வெள்ளரிக்காய் சிறந்து விளங்குகிறது. மேலும் பித்தம், சிறுநீரகம், கோளாறுகளை குணமாக்குகிறது.

வயிற்று புண்

வயிற்றில் புண் இருப்பவர்கள் தினமும் வெள்ளரி சாப்பிட்டால் முழுமையாக புண் குறைந்து விடும் மற்றும் இதில் குளிர்ச்சி தண்மை இருப்பதால் குடலுக்கு ஆறுதல் அளிக்கும்.

சருமம்

வெள்ளரிக்காயில் நீர்சத்து அதிகம் இருப்பதால் வறண்ட தோல், காய்ந்த முகம், உதடு வெடிப்பு, நாக்கு வறட்சி, ஆகியவை குறைந்து சருமம் ஆரோக்கியம் பெரும்.

நோய் எதிர்ப்பு சத்தி

வெள்ளரிக்காயில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் உடலில் நோய் தொற்று ஏற்படுவதை கட்டுப்படுத்தி நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கிறது. 

இரத்த அதிகரிப்பு

வெள்ளரிக்காய் உடலில் இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் ரத்தம் அதிகரித்து ரத்த சோகை,  ரத்த குறைபாட்டை குறைகிறது. மேலும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

நீரிழிவு

நீரிழிவு பிரச்சனை இருப்பவர்கள் தினமும் வெள்ளரி ஜூஸ் குடித்து வந்தால் உடலில் சர்க்கரையின் அளவு சமமாக இருக்கும், மற்றும் நீரிழிவால் ஏற்படும் உடல் எடை அதிகரிப்பை கட்டுப்படுத்தும்.  

K.sakthipriya
Krishi Jagran

English Summary: cucumber makes your life healthier: best healthy benefits of cucumber Published on: 08 May 2019, 12:48 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.