Health & Lifestyle

Saturday, 09 October 2021 08:53 AM , by: Elavarse Sivakumar

கொரோனா என்ற இந்த வார்த்தை நமக்குப் பல்வேறு பாடங்களைப் புகட்டிச் சென்றது. இதில் முக்கியமான ஒன்று என்னவென்றால், கொரோனாவில் இருந்து மீண்டபிறகு, பழைய நிலைமைக்கு உடலைக் கொண்டுவருவதுதான்.

உணவு முறை (Diet)

உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை மீட்டெடுப்பதற்கும், உங்கள் வலிமையை மீட்டெடுப்பதற்கும், நீங்கள் கோவிட்டில் இருந்து மீண்ட பிறகு சரியான உணவு முறை முக்கியமானது.

போஸ்ட்-கோவிட் நோய் மீட்டெழுதல் சிலருக்கு சில நாட்களும் மற்றவர்களுக்கு சில மாதங்களும் ஆகலாம். தொண்டை புண், இருமல், மூச்சு திணறல், தசை வலி, மூட்டு வலி, மன குழப்பம், தூக்கமின்மை, மன அழுத்தம் அல்லது பதட்டம் ஆகியவை பலர் எதிர்கொள்ளும் சிக்கல்கள்.

உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை மீட்டெடுப்பதற்கும், உங்கள் வலிமையை மீட்டெடுப்பதற்கும், நீங்கள் கோவிட்டில் இருந்து மீண்ட பிறகு சரியான உணவு முறை முக்கியமானது.

தண்ணீர் தேவை


உணவு மற்றும் ஊட்டச்சத்துக்கு முன், கோவிட் மற்றும் பிந்தைய காலத்தில் நீரேற்றம் மிக அவசியம். நம் உடலில் உள்ள அனைத்து செல்கள், திசுக்கள் மற்றும் தசைகளுக்கு தண்ணீர் தேவை. இது நச்சுகளை வெளியேற்றி, வீக்கத்தை குறைத்து, இரத்த அழுத்தத்தை சாதாரணமாக வைக்க உதவுகிறது.


நாள் முழுவதும் உங்கள் உடல் நீரேற்றமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள கிரீன் டீ, எலுமிச்சை சாறு, மோர் போன்ற திரவங்கள் மற்றும் நீர் நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும்.

புரதம்

உங்கள் எல்லா உணவிலும் புரதம் மிக முக்கியமான பகுதியாக இருக்க வேண்டும்.ஏனெனில் புரதம் உடலின் தசைகளை நிரப்புகிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது. அமினோ அமிலங்கள் புரதத்தை உருவாக்கும் கரிம சேர்மங்கள் மற்றும் சில அத்தியாவசிய அமினோ அமிலங்கள் நம் உணவில் இருந்து மட்டுமே கிடைக்கும்.

அசைவம் சாப்பிடுபவர்களுக்கு, முட்டை, கோழி, இறைச்சி, மீன் போன்றவை சில புரத ஆதாரங்கள். அதேநேரத்தில் சைவ உணவு உண்பவர்களுக்கு, பன்னீர், பருப்பு, கடலை, மற்றும் தானிய வகைகள் நல்ல புரத ஆதாரமாக இருக்கும்.

தாதுக்கள் (Minerals)

வைட்டமின் சி, டி, மற்றும் மெக்னீசியம், ஜின்க், செலினியம் போன்ற தாதுக்கள் கோவிட் நோய் மீட்பு காலத்திற்குப் பிறகு மிகவும் முக்கியம்.

  • எலுமிச்சை நீரில் உப்பு சேர்த்தால் வைட்டமின் சி மற்றும் உடலுக்கு நீர்ச்சத்து கிடைக்கும். நெல்லிக்காய் வைட்டமின் சி -யின் நல்ல ஆதாரமாக இருக்கிறது.

  • வைட்டமின் டி உடலில் ஹார்மோனாக செயல்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி, எலும்பு மற்றும் தசை ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

  • வைட்டமின் டி யின் சில உணவு ஆதாரங்களில் காளான், முழு முட்டை போன்றவை அடங்கும். ஆனால் நாம் அனைவரும் அறிந்தபடி, சூரிய ஒளிதான் வைட்டமின் டி.யின் சிறந்த ஆதாரம்.

  • மெக்னீசியம் உடலில் நூற்றுக்கணக்கான வெவ்வேறு செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. நரம்புகள் மற்றும் தசை செயல்பாடுகளுக்கு இது அவசியம். மெக்னீசியம் இருதய நோய்களிலிருந்து பாதுகாக்கிறது மற்றும் இதய செயல்பாட்டை ஒழுங்குபடுத்துகிறது.

  • மெக்னீசியம் நிறைந்த உணவுகள் கோவிட்டின் சில பக்க விளைவுகளான மனச்சோர்வு மற்றும் பதட்டத்தை போக்க உதவும்.

  • துத்தநாகம்(zinc) ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைத் தடுக்கிறது மற்றும் நிமோனியா அபாயத்தைக் குறைக்கிறது. நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க இந்த கனிமங்களின்(minerals) சரியான சமநிலை எடுக்கப்பட வேண்டும்.

குடல் ஆரோக்கியம் (Intestinal health)

சர்க்கரை உணவுகள் குடலில் இருந்து நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை அகற்றும். தயிர், மோர், புளிப்பு ஊறுகாய் போன்ற புரோபயாடிக் உணவுகள் மற்றும் வெங்காயம், பூண்டு, தேங்காய், தக்காளி போன்ற ப்ரீபயாடிக் உணவுகளை தொடர்ந்து உட்கொள்வது உங்கள் குடல் ஆரோக்கியத்திற்கு உதவும்.

தவிர்க்க வேண்டியவை  (Things to avoid)

  • அனைத்து சர்க்கரை உணவுகள் மற்றும் கார்போனேட்டட்(carbonated) பானங்களை தவிர்க்கவும்.

  • உடலில் அதிக வீக்கத்தை ஏற்படுத்தும் மைதா மற்றும் துரித உணவை உட்கொள்ள வேண்டாம்.

  • ஹோட்டல்/வெளிப்புற உணவைத் தவிர்க்கவும்.

உடலுக்கு வலிமை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை திரும்பப் பெற ஆரோக்கியமான உணவு முறை, சீரான ஓய்வும் பின்பற்ற வேண்டும். இரவு 7-8 மணிநேரம் தூக்கம் உடல் ஆரோக்கியத்திற்கு அவசியம்.

மேலும் படிக்க...

இயர்போன் பயன்படுத்துவதால் இத்தனைப் பிரச்னைகள் வருமா!

சருமப் பிரச்சனை தீர Milk water bathபாத் தான் பெஸ்ட்- விபரம் உள்ளே!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)