1. வாழ்வும் நலமும்

இயர்போன் பயன்படுத்துவதால் இத்தனைப் பிரச்னைகள் வருமா!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Does using an earphone cause such problems?
Credit : Lifewire

ஆள் பாதி ஆடை பாதி என்ற நிலைமாறி, ஆள் பாதி, செல்போன் மீதி என்பதுதான் இன்றைய மனிதர்களின் அடையாளமாக உள்ளது. அதிலும் ஸ்மார்ட்போன்கள் இல்லாத நபர்களை விரல் விட்டு எண்ணிவிடும் அளவுக்கு ஸ்மார்போன்மயமாகிவிட்டது இந்த உலகமே.

இயர்போன் (Earphone)

அதிநவீன வசதிகளைக் கொண்ட ஸ்மார்ட்போனுக்கு, மிக முக்கியமான அணிகலனே இயர்போன்தான். இந்த இயர்போனைப் பயன்படுத்துவதுதான், சாதுர்யமானது. ஏனெனில், நம்முடைய செய்கைகள் அப்போதுதான் மற்றவர்களுக்கு இடையூறாக இருக்காது.

எச்சரிக்கை (Warning)

அதேநேரத்தில், இயர்போன்கைளப் பயன்படுத்தன் மூலம் பல சிக்கல்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம். சில வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் செவிப்புலன் சேதம் அடையாமல் பாதுகாக்கலாம்.

ஏனெனில் காதுகேளாமை, உலகம் முழுவதும் அதிகரித்துவரும் பிரச்சினையாக இருக்கிறது. உலக மக்கள் தொகையில் 5.3 சதவீதம் பேர் காது கேளாமை பிரச்சினைக்கு ஆளாகி இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.
இந்தியாவில் 6.3 சதவீதம் பேருக்கு செவித்திறன் குறைபாடு இருப்பதாக புள்ளி விவரம் கூறுகிறது. 85 டெசிபலுக்கு அதிகமான சத்தத்தைத் தொடர்ந்து நீண்ட காலம் கேட்க நேரிடும்போது காதுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடும்.

கடைப்பிடிக்க வேண்டியவை (Things to follow)

 • ஸ்மார்ட்போனில் ஹெட்போன் உபயோகிக்கும்போது ஒலியின் அளவு 60 முதல் 80 டெசிபலுக்கு இடையே இருக்கவேண்டியது கட்டாயம்.

 • 85 டெசிபல்லை தாண்டினால் காதுகேளாமை பிரச்சினையை எதிர்கொள்வது தவிர்க்க முடியாததாக மாறிவிடும்.

தவறுகள் எவை? (What are the mistakes?)

 • நிறைய பேர் பயணங்கள் மேற்கொள்ளும்போது இயர்போனை அதிகம் உபயோகிப்பார்கள்.

 • இரவில் பாடல்களை கேட்டுக்கொண்டே தூங்குவார்கள்.

 • காதில் இருக்கும் இயர்போனை கழற்றாமல் அப்படியே தூங்குபவர்களும் இருக்கிறார்கள். அது தவறானது.

 • தினமும் அதிகபட்சம் 4 மணி நேரம் வரை இயர்போன் உபயோகிக்கலாம்.

 • ஆனால் 80 டெசிபல்லுக்கும் கீழே தான் ஒலி அளவு இருக்க வேண்டும்.

 • மென்மையான பட்ஸ் கொண்ட இயர்போனை உபயோகிப்பது, காதுகளுக்கு இதமளிக்கும்.

 • காது சவ்வுகளில் கீறல்கள், வலிகள் ஏற்படாமல் தடுக்க உதவும். காதுகளில் தொற்றுகள் ஏற்படாமலும் பாதுகாக்கும்.

காதுகள் பராமரிப்பு (Ear care)

 • காதுகளை சுத்தம் செய்வதற்கு தேவைப் பட்டால் மட்டும் இயர் பட்ஸ் பயன்படுத்தலாம்.

 • வேறு எந்தவொரு பொருட்களையும் உபயோகிக்கக்கூடாது.ஏனெனில் அவை காதுகளில் நோய்த்தொற்றுகள் ஏற்படுவதற்கு வழிவகுத்துவிடும்.

 • கை, கால்களை சுத்தம் செய்வதுபோல காதுகளையும் தவறாமல் சுத்தம் செய்ய வேண்டும்.

 • தூசுகள், அழுக்குகள் காதில் தங்குவதற்கு இடம் கொடுக்கக்கூடாது.

 • இசை நிகழ்ச்சிகள், விருந்து நிகழ்வுகள், விளையாட்டு நிகழ்வுகளை ரசிப்பதற்கு இயர்போன் பயன்படுத்தும் பட்சத்தில் அதிக சத்தம் காதுகளை சென்றடையக்கூடாது.

 • ஒருமுறை இயர்போன் பயன்படுத்தினால் மறுமுறை உபயோகிப்பதற்கு முன்பு 18 மணி நேரம் காதுகளுக்கு ஓய்வு கொடுப்பது நல்லது.

 • இயர்போன் பயன்படுத்துபவர்கள், அதிக இரைச்சல் கொண்ட பகுதிகளில் வேலை பார்ப்பவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை காது பரிசோதனை மேற்கொள்வது நல்லது.

 • ஸ்மார்ட்போன் பயன்பாடு அவசியம்தான் என்றபோதிலும், காதுகள் நம் ஆயுள் உள்ளவரைக் கேட்கும் திறனுடன் இருக்க வேண்டியது அதைவிட அவசியமான ஒன்றுதானே.

 • எனவேக் காதுகளின் நலன்கருதி, நல்த்  தரமான இயர்போன்களைப் பயன்படுத்துவதுடன், அதன் பயன்பாட்டையும் படிப்படியாகக் குறைத்துக்கொள்வோம்.

மேலும் படிக்க...

சருமப் பிரச்சனை தீர Milk water bathபாத் தான் பெஸ்ட்- விபரம் உள்ளே!

தொப்பையைக் குறைக்க உதவும் நெல்லி- 3 வாரத்தில் குட்பை சொல்ல உதவுகிறது!

English Summary: Does using an earphone cause such problems? Published on: 02 October 2021, 11:10 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.