இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 30 August, 2022 3:22 PM IST

உடல் எடை அதிகரிப்பு என்பது தற்போது, பலரையும் வாட்டி வதைக்கும் பிரச்னையாக உருமாறி வருகிறது. அவ்வாறு, அதிகரித்து வரும் எடையைக் குறைக்க நாம் கடுமையாக முயற்சி செய்கிறோம். 

ஆனால் பல சமயங்களில் இதற்கான தீர்வு நம் சமையலறையிலேயே இருக்கிறது. அதுதான் ஆளி விதைகள்.எடையைக் குறைக்க மேற்கொண்டப் பலவித முயற்சிக்கு பலன் கிடைக்காத பட்சத்தில், அத்தகைய சூழ்நிலையில் வேறுபட்ட புதிய விதமான ஏதாவது முயற்சி செய்ய வேண்டியது அவசியமாகிறது. 

டைட்டாக மாறும் ஆடைகள்

வயிறு மற்றும் இடுப்பைச் சுற்றி கொழுப்பு அதிகரிக்கும் போதெல்லாம், உங்கள் ஆடை டைட்டாக மாறும், இதனால் நீங்கள் சங்கடத்தை சந்திக்க வேண்டியிருக்கும். இந்தப் பிரச்னை தீர, ஆளிவிதையின் அதிசய குணங்கள் நிச்சயம் உதவி செய்யும். நாம் ஆளி விதைகளைத் தொடர்ந்து உட்கொண்டால், அதிகரித்து வரும் எடையை எளிதில் குறைக்கலாம்.

ஃபைபர் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் ஆளிவிதையில் ஏராளமாக காணப்படுகின்றன. இது புற்றுநோய் போன்ற நோய்களிலும் நன்மை பயக்கும். இந்த விதைகளை முறையாக உட்கொண்டால் ஆரோக்கிய நன்மைகள் நிச்சயம் கிடைக்கும்.

பசியின்மை

பொதுவாக ஆளி விதை எடை தளர்வான உணவு என்றும் அழைக்கப்படுகிறது. 100 கிராம் ஆளிவிதையில் சுமார் 18 கிராம் புரதம் உள்ளது. அதேபோல் மசிலேஜ் எனப்படும் நார்ச்சத்தும் இதில் உள்ளது. இதன் காரணமாக நீண்ட நேரம் பசியின்மை இருக்காது, இதன் காரணமாக எடை படிப்படியாக குறையத் தொடங்குகிறது. எனவே தினமும் விதைகளை சாப்பிட்டு வந்தால் பசியின்மை குறையும்.

எப்படி சாப்பிடுவது?

ஆளி விதைகளில் பழுப்பு மற்றும் மஞ்சள் என 2 வகைகள் உள்ளன, இவை இரண்டில் சத்தான கூறுகள் உள்ளது. இதை சாப்பிடுவதால் ஆரோக்கியம் மேம்படும். குறிப்பாக சத்துள்ள தேநீராக, பானமாக மாற்றிப் பருகலாம். அப்படிப் பருகினால், நீங்கள் எதிர்பார்க்கும் பலன் நிச்சயம் கிடைக்கும்.

செய்முறை

  • நீங்கள் சாப்பிட விரும்பினால், விதைகளை சூடான கடாயில் வறுக்கவும்,

  • பின்னர் அதை அரைத்து தூள் வடிவில் செய்துக்கொள்ளலாம்.

  • இப்போது ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி அதில் ஆளி விதை பொடியை கலக்கவும்.

  • இப்போது தண்ணீரைக் கொதிக்க வைத்து, இந்த தண்ணீர் வெதுவெதுப்பானதும் குடிக்கவும்.

  • நீங்கள் அதன் சுவையை மேலும் அதிகரிக்க விரும்பினால், வெல்லம் மற்றும் எலுமிச்சை பழச்சாற்றை கலந்து அருந்தலாம்.

தகவல்
டாக்டர் ஆயுஷி யாதவ்
பிரபல உணவியல் நிபுணர்

மேலும் படிக்க...

தமிழக இளைஞர்களுக்கு வேலை- சென்னையில் சிறப்பு முகாம்!

வெறும் 750 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் கிடைக்கும்!

English Summary: Super seeds to help you lose weight!
Published on: 30 August 2022, 03:22 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now