பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 1 May, 2022 4:49 PM IST
Tasty Mutton Goli Biryani Recipe

மட்டன் கோலி பிரியாணி அல்லது கோலி பாட் என்றும் இது அ்ழைக்கப்படுகிறது. இது ஒரு பிரபலமான மகாராஷ்டிர மட்டன் பிரியாணி உணவாகும். இந்த பிரியாணி மட்டன் துண்டுகளை அடுக்கித் தயார் செய்யப்படுகிறது.

ஆட்டிறைச்சி துண்டுகளை இறைச்சி உருண்டைகளாக நறுக்கப்பட்டு பின்னர் அரிசியுடன் சேர்த்துச் செய்யப்படுகிறது. பிரியாணியில் சேர்க்கப்படும் மசாலாப் பொருட்களின் நறுமணம்தான் அதை மிகவும் சுவையாக மாற்றுகிறது. ஈட் பார்ட்டியை நடத்தப் போகிறீர்கள் என்றால், இந்த ரெசிபி உங்கள் மெனுவில் இருக்க வேண்டும். இது ஒரு விருந்துக்கு ஏற்றது. அதோடு, உங்கள் விருந்தினர்களை அதன் சுவையால் திகைக்க வைக்கும். இந்த சுவையான பிரியாணியை உங்கள் வீட்டிலேயே செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்

1 தேக்கரண்டி இஞ்சி விழுது
2 கிராம்பு
2 கப் ஊறவைத்த, வடிகட்டிய பாஸ்மதி அரிசி
1/4 கப் எண்ணெய்
1 கப் வறுத்த வெங்காயம்
1/8 தேக்கரண்டி இலவங்கப்பட்டை தூள்
1/2 தேக்கரண்டி குங்குமப்பூ
1 அடித்த முட்டை
4 தேக்கரண்டி சோள மாவு
3 பச்சை ஏலக்காய்
1 1/2 தேக்கரண்டி நெய்
1 தேக்கரண்டி பூண்டு விழுது
2 கப் நறுக்கிய ஆட்டிறைச்சி
1 தேக்கரண்டி கருப்பு சீரகம்
தேவைக்கேற்ப உப்பு
3/4 கப் பால்
1/4 கப் ரொட்டி துண்டுகள்

செயல்முறை 01: இறைச்சி பந்துகளை உருவாக்கவும்!
ஒரு பாத்திரத்தில், துண்டு துண்டுகளாக வெட்டப்பட்ட இறைச்சி, இஞ்சி விழுது, பூண்டு விழுது, அடித்த முட்டை, 2 டீஸ்பூன் கார்ன்ஃப்ளார், உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும். சிறிய மீட்பால்ஸை உருவாக்கி ஒரு மணி நேரம் உறைய வைக்கவும். இப்போது 2 டீஸ்பூன் கார்ன்ஃப்ளாருடன் சிறிது தண்ணீர் கலந்து கொள்ளவும். ஒவ்வொரு மீட்பால்ஸையும் சோள மாவில் நனைத்து நன்றாக உருண்டையாக்கவும். இவ்வாறு செய்யப்பட்ட பால்ஸ் ஆறியதும், மீட்பால்ஸை எண்ணெயில் மிருதுவாகப் பொரித்துத் தனியாக வைக்கவும். இதற்கிடையில், குங்குமப்பூவை பாலில் ஊற வைக்கவும்.

செயல்முறை 02: அரிசி தயார்
இப்போது, ​​ஒரு ஆழமான நான்-ஸ்டிக் பாத்திரத்தில் நெய்யை சூடாக்கி, கருப்பு சீரகம், கிராம்பு, ஏலக்காய் மற்றும் இலவங்கப்பட்டை சேர்க்கவும். நன்கு கலக்கவும், பின்னர் அரிசி சேர்க்கவும். அதனுடன் உப்பு சேர்த்து 4 கப் தண்ணீர் சேர்க்கவும். ஒரு கொதி வரட்டும். ஒரு கொதி வந்ததும், அடுப்பின் தீயை குறைத்து, அரிசியை சுமார் 10 நிமிடங்கள் சமைக்கவும். அதன் பின்பு, அடுப்பை அணைக்கவும்.

செயல்முறை 03: அரிசியை அடுக்கவும்
மற்றொரு கடாயில், மீட்பால்ஸில் பாதி மற்றும் அரிசி பாதி என ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கவும். ஊறவைத்த குங்குமப்பூ பாலில் பாதியளவு மற்றும் ஆழமான வறுத்த வெங்காயத்தின் பாதியை அதன் மேல் ஒரு அடுக்கு இருக்குமாறு ஊற்றவும். இதை செய்து முடித்ததும், மீதமுள்ள அரிசியைத் தொடர்ந்து மீட்பால்ஸின் மற்ற பாதியுடன் சேர்க்கவும். இறுதியாக, ஊறவைத்த குங்குமப்பூ மற்றும் வெங்காயம் மீதமுள்ளவற்றை சேர்க்கவும். கடாயை மூடி 10 நிமிடம் வேக விடவும்.

செயல்முறை 04: உங்கள் மட்டன் கோலி பிரியாணி பரிமாறத் தயாராக உள்ளது
நீங்கள் இன்னும் சிறிது மாவை நான்-ஸ்டிக் பானில் ஒரு மணி நேரம் குறைந்த வெப்ப அதை வைத்து அதன் பின் உடனடியாக பரிமாறவும். உங்கள் சுவையான மட்டன் கோலி பிரியாணி தயார். சாப்பிட்டு மகிழுங்கள்.

மேலும் படிக்க

Chicken Nuggets இனி வீட்டிலேயே செய்யலாம்!

UGC NET 2022: மாதம் 31,000 உதவித்தொகையுடன் படிக்க வேண்டுமா? விவரம் உள்ளே!

English Summary: Tasty Mutton Goli Biryani Recipe
Published on: 01 May 2022, 04:48 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now