கோடை காலத்தில் மாங்காயை அறுவடை செய்யும்போதுப் பின்பற்ற வேண்டிய தொழில்நுட்பங்களை அறிந்துகொண்டு கடைப்பிடித்தால் நிச்சயம் நல்ல மகசூல் ஈட்டலாம்.
முக்கனிகளில் ஒன்று
முக்கனிகளில் ஒன்றான மாம்பழம் என்பது, சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் தன் சுவையால் கட்டிப்போட்டுள்ள பழம். இதை வேண்டாம் என்று சொல்பவர்கள் சொற்பமாகவே இருக்கலாம்.
ஓராண்டு காத்திருப்பு (One year wait)
அதிலும் குறிப்பாகக் கோடை காலத்தில் மட்டுமே மாம்பழத்தை நாம் சுவைக்க முடியும் என்பதால், இந்த மாதங்களில் கிடைக்காவிட்டால், இனி அடுத்த ஆண்டுவரைக் காத்திருக்க வேண்டும்.
மாதா ஊட்டாத உணவு
எனவே இந்த ஓரிரு மாதங்கள் மாம்பழம்தான் நம்மில் பலரது விருப்பமாக இருக்கும். அதனால்தான் மாதா ஊட்டாத உணவை மாம்பழம் ஊட்டும் என்று கூறுவார்கள்.
தற்போது மா மரத்தில் இருந்து மாங்காய்கள் அறுவடை நடைபெற்று வருகிறது.
இந்த கொரோனாக் காலகட்டத்தில் மாம்பழம் விற்பனை செய்வதில் இடர்பாடுகள் உள்ளன
எனவே நாம் மா அறுவடையின் போது பின்பற்ற வேண்டிய சிலத் தொழில்நுட்பகளை இங்கு பட்டியலிடுகிறோம்.
ஏப்ரல் முதல் ஜூலை (April to July)
பொதுவாக மா மரங்கள் ஏப்ரல் முதல் ஜூலை வரை ரகங்களுக்குகேற்ப அறுவடைக்கு வரும்,
பல ரகங்கள் (Many varieties)
ஏப்ரல் மாதத்தில் செந்தூரா ரகமும், அல்போன்சா, பங்கனப்பள்ளி போன்ற ரகங்கள் மே முதல் ஜூலை வரை அறுவடைக்கு வரும்
அறுவடை உத்திகள் (Harvesting strategies
-
பொதுவாக காய்கள் அடர் பச்சை நிறத்தில் இருந்து சாதாரண பச்சை நிறத்திற்கு மாறும்.
-
காய்களில் இருக்கும் சதைப் பகுதி கல் போன்ற இறுக்கத்தில் இருந்து இளக்கம் கொடுக்கும்
-
வெளிறிய மஞ்சள் நிறத்திற்கு காய் கள் மாறும்
பழம் அழகல் நோயைத் தவிர்க்க
-
மாங்காய்களை ஒரு இன்ச் நீளம் காம்பு விட்டுத்தான் அறுவடை செய்ய வேண்டும்.
-
அவ்வாறு செய்தால் பால் காய் மீது வடிவது தடைப் படும்.
-
அதனால் ஏற்படும் பழம் அழகல் நோயை தவிர்க்க முடியும்.
அடிபடாமல் அறுவடை (Harvest without beating)
காய்களை அடிபடாமல் அறுவடை செய்ய வேண்டும்.
வெயில் கூடாது
அறுவடை செய்தக் காய்களை வெயிலில் போடக் கூடாது.
கரும்புள்ளிகளை நீக்குதல் (Removal of blackheads
அறுவடை செய்த மாங்காய்களை 52-55டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை யில் 5-10நிமிடங்கள் வெந்நிரில் மூக்கி எடுப்பதன் மூலம் காய்களில் ஏற்படும் கரும்பு புள்ளிகளைத் தவிர்க்கலாம்.
மாங்காயை ஓரே சீராக பழுக்க வைக்கும் தற்போது எத்திலீன் வாயு பயன் படுத்தப்படுகிறது.
கார்பைடு கற்கள் (Carbide stones)
சில இடங்களில் கால்சியம் கார்பைடு கற்கள் வைத்து பழுக்க வைக்கும் படுவது தவறான முறையாகும் இதை உண்பதால் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்.
பழக்க வைக்கும் யுக்தி (Habitual trick)
இயற்கையாகவே மாங்காய்களை வைக்கோல் போட்டு இருட்டு அறையில் வைத்தால் 2-3 நாட்களில் பழுத்து விடும்.
விற்பனை (Sale)
-
காய்களை காம்புடன் தனித் தனி கவர் போட்டு வைத்தால் சேதம் ஏற்பாடது.
-
அட்டைப் பெட்டி மற்றும் பிளாஸ்டிக் கிரேடுகளில் வைத்து விற்பனை செய்ய வேண்டும்.
குவித்து வைக்கக் கூடாது (Do not pile up)
-
தனிப்பட்ட முறையில் வாகனங்கள் மூலம் நகரப் பகுதியில் விற்பனை செய்யலாம்.
-
உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யலாம்.
-
ஏற்றுமதி நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு விற்பனை செய்யலாம்.
தகவல்
அக்ரி சு சந்திரசேகரன்
வேளாண் ஆலோசகர்
அருப்புக்கோட்டை
9443570289
மேலும் படிக்க...
விழுப்புரத்தில் 24,000 டன் நெல் கொள்முதல்! கூடுதல் விலை கிடைப்பதால் வரத்து அதிகரிப்பு!
கட்டுப்பாடுகளுடன் உர விற்பனை நிலையங்கள் திறக்க அனுமதி!