1. செய்திகள்

கட்டுப்பாடுகளுடன் உர விற்பனை நிலையங்கள் திறக்க அனுமதி!

R. Balakrishnan
R. Balakrishnan
Fertilizer
Credit : Kalani Poo

கொரோனா பரவலை தொடர்ந்து தளர்வற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் உர விற்பனை நிலையங்கள் காலை 6 மணி முதல் 10 மணி வரை திறந்து விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

ஊரடங்கு

இந்த சமயத்தில் விவசாய சாகுபடி (Cultivation) பணிகள் தங்கு தடையின்றி நடைபெறும் வகையில் அனைத்து பயிர்களின் சாகுபடிக்குத் தேவையான உரங்கள், விதைகள் மற்றும் பூச்சி மருந்துகள் தொடந்து கிடைத்திடும் வகையில் உர விற்பனை நிலையங்கள் காலை 6 மணி முதல் 10 மணி வரை திறந்திருக்க அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் 279 தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, திறந்து விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இருப்பு

மாவட்டத்தில் தற்போது யூரியா 3560 மெட்ரிக் டன்னும், டி.ஏ.பி 670 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 340 மெட்ரிக் டன்னும், காம்பளக்ஸ் 1360 மெட்ரிக் டன்னும் மொத்தம் 5930 மெட்ரிக் டன் உரங்கள் அனைத்து தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. உர விற்பளையாளர்கள் (Fertilizer Merchants) அரசு நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேல் உரங்கள் விற்பனை செய்தால் உரக்கட்டுபாடு ஆணை 1985-ன்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மானிய உரங்களை விவசாயிகளின் ஆதார் அட்டை எண் (Aadhar number) பெற்று, விற்பனை முனை எந்திரம் மூலம் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.

விற்பனை

மேலும் டி.ஏ.பி உர மூட்டை (50 கிலோ) ரூ.ஆயிரத்து 200 என்ற பழைய விலைக்கே விற்பனை செய்ய வேண்டும். உரங்களின் விலை விபரங்கள் மற்றும் இருப்பு விவரங்கள் தகவல் பலைகையில் குறிப்பிட்டு அனைவருக்கும் தெரியும்படி பராமரிக்கப்பட வேண்டும். மீறினால் உரக் கட்டுபாட்டு ஆணை 1985 பிரிவு 4-ன்படி உர விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். விசாயிகளின் ஆதார் அட்டை எண் கொண்டு, பி.ஓ.எஸ். மூலம் உர விற்பனை செய்தமைக்கு அந்த விவாசாயிக்கு உரிய ரசீது வழங்க வேண்டும். மீறினால் உரக்கட்டுபாட்டு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

உரக்கட்டுப்பாடு

உரிய ஆவணங்கள் இன்றி விற்பனை செய்தாலோ, விவசாயிகள் அல்லாதோருக்கு விற்பனை செய்தாலோ, அரசு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு உர விற்பனை செய்வது தொடர்பாக புகார் ஏதும் பெறப்பட்டாலோ உரக்கட்டுப்பாடு சட்டத்தின்படி உரிமம் ரத்து செய்யப்படும். இவ்வாறு ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் டாம் சைலஸ் எச்சரித்துள்ளார்.

மேலும் படிக்க

விழுப்புரத்தில் 24,000 டன் நெல் கொள்முதல்! கூடுதல் விலை கிடைப்பதால் வரத்து அதிகரிப்பு!

300 கிலோ உரத்தை 5 டன் உரப் பயன்பாட்டுக்கு சமமாக மாற்றுவது எப்படி?

English Summary: Permission to open fertilizer outlets with restrictions! Published on: 02 June 2021, 02:23 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.