நிலக்கடலையில் (Peanut) போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால், அது மிகவும் நல்லது. அதிலும் குறிப்பாக, இனப்பெருக்கம் விரைவாக நடக்க உதவும். எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாது. நிலக்கடலையில் உள்ள மாங்கனீஸ் சத்து, மாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுவதோடு, நாம் உண்ணும் உணவில் இருக்கும் கால்சியத்தை உடல் ஈர்க்க உதவுகிறது.
உடல் எடையை பராமரிக்க (To maintain body weight)
நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்ற தவறான எண்ணம் இருக்கிறது. உண்மையில், உடல் எடையை பராமரிக்க நினைப்பவர்களுக்கும் வேர்க்கடலை (Peanut for Weight Loss) சிறந்தது. அதில் உள்ள ரெஸ்வரெட்ரால் என்ற சத்து இதய வால்வுகளை பாதுகாத்து, இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.
இளமையை பராமரிக்க உதவும் நிலக்கடலையில் உள்ள பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் (Antioxidant in Peanut) நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது. மூளை வளர்ச்சிக்கு உதவும் விட்டமின் 3 நியாசின் உள்ள நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டால், ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.
மூளையை உற்சாகப்படுத்த (Stimulate Brain)
நிலக்கடையில் உள்ள பரிப்டோபான் என்ற அமினோ அமிலம், செரட்டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும் உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. இதனால், மூளை நரம்புகளை தூண்டி, மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிட்டால் மன அழுத்தமே ஏற்படாது. இதில் போலிக் ஆசிட் சத்துக்கள் அதிகம் நிரம்பி உள்ளது.
மேலும் படிக்க