1. வாழ்வும் நலமும்

குளிர்காலத் தொற்று நோய்களைத் தீர்க்கும் கஷாயங்கள்!

R. Balakrishnan
R. Balakrishnan

Winter Infections

மழை, பனி, குளிர்காலம் வந்துவிட்டாலே சளி, ஜுரம் போன்ற தொற்று ஏற்படும். இது போன்ற உடல் உபாதையின் பாதிப்பில் இருந்து தப்பிக்க வீட்டிலேயே எளிய நாட்டு வைத்திய கஷாயங்கள் செய்து தொற்று ஏற்படாமல் பாதுகாக்கலாம்.

இருமல் (Cough)

சிறு துண்டு சுக்கு, அதிமதுரம் 2 குச்சிகள், சித்தரத்தை 2 துண்டு, உடைத்த மிளகு 8, கொட்டை நீக்கிய பேரீச்சம் பழம் 2, வால்மிளகு ½ ஸ்பூன். இவற்றை உரலிலோ, மிக்சியிலோ பொடித்து 2 டம்ளர் தண்ணீரில் கொதிக்க விடவும். தண்ணீர் பாதியாக சுண்டியதும் வடிகட்டி பனங்கற்கண்டு, பால் சேர்த்துக் குடித்தால் இருமல் குணமாகும்.

வயிறு மந்தம் 

மழை, குளிர்காலங்களில் வயிறு மந்தமாகும். ஜீரணமாவதற்கு சிரமமாகும். இதற்கு கொத்தமல்லி விதை 1 டேபிள் ஸ்பூன், சீரகம் 1 டேபிள் ஸ்பூன் மிக்சியில் பொடித்து இத்துடன் ½ ஸ்பூன் சுக்குப்பொடி சேர்த்து ஒரு டம்ளர் நீரில் கொதிக்க விடவும். பாதியாக வற்றியபின் அதில் பனங்கற்கண்டு சேர்த்து சூடாக குடித்தால் நிவாரணம் தரும். வயிறும் சுத்தமாகும். காலை, மாலை இருவேளையும் குடிக்கவும்.

எதிர்ப்புச் சக்தி (Immunity)

பனங்கற்கண்டு 1 டம்ளர், மிளகு 2 டேபிள் ஸ்பூன், சுக்குப் பொடி- 1 டேபிள் ஸ்பூன், அரிசித் திப்பிலி 10, ஏலம் 6, கிராம்பு 10, ஜாதிக்காய் ¼ துண்டு. இவை அனைத்தையும் (பனங்கற்கண்டு தவிர) மிக்சியில் கரகரப்பாக பொடிக்கவும். 2 டம்ளர் தண்ணீரில் பனங்கற்கண்டை போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி, மீண்டும் சூடு செய்து பொடியை போட்டு இரண்டு நிமிடங்கள் கிளறி கொதிக்க விடவும். ஆறியபின் கண்ணாடி பாட்டிலில் ஊற்றி ஃபிரிட்ஜில் வைக்கலாம். குடிக்கும்போது வெது வெதுப்பான நீரில் ¼ டம்ளர் பானகம் விட்டு குடிக்கலாம். நோய்களை சமாளிக்கும் நிவாரண கஷாயம் இது.

தொண்டை பிரச்னை

துளசி 1 கைப்பிடி, ஓமவல்லி இலைகள் 6, மாவிலை 2, தூதுவளைக்கீரை 6, மணத்தக்காளி இலை ஒரு கைப்பிடி. இவைகளை நன்கு கழுவி சிறிதாக நறுக்கவும். மிளகு, சீரகம் 1 ஸ்பூன் வறுத்து பொடிக்கவும். அனைத்தையும் நீரில் கொதிக்க விடவும். நன்றாக கொதித்தபின் 1 டம்ளர் கஷாயத்திற்கு தேன் ஒரு ஸ்பூன் சேர்த்து மெல்ல அருந்தினால் தொண்டைகட்டு, கமறல், தொண்டை வலி குணமாகும். குளிர்காலத்திற்கேற்ற கஷாயம் இது.

மேலும் படிக்க

புரதச் சத்து நிறைந்த பாதுகாப்பான உணவு பாசிப்பருப்பு!

பாத வெடிப்பு மறைய இப்போதே இதைச் செய்யுங்கள்!

English Summary: Kashayam to cure winter infections!

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2022 Krishi Jagran Media Group. All Rights Reserved.