Health & Lifestyle

Friday, 24 September 2021 03:37 PM , by: Aruljothe Alagar

The best benefits for women from eating dried coconut!

தேங்காய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை அளிக்கிறது. பச்சை தேங்காய் அதாவது இளநீர், காய்ந்த தேங்காயில் இருக்கும் நீர் ஆரோக்கியத்திற்கு மிகவும் நம்மை தருகிறது. தேங்காயில் இலேசான இனிப்பு சுவை காணப்படும். தேங்காய் சாப்பிடுவது அனைவருக்கும் நன்மை பயக்கும் என்றாலும், குறிப்பாக பெண்கள் அதிலிருந்து பல நன்மைகளைப் பெறுகிறார்கள்.காய்ந்த தேங்காய் ஏன் பெண்களுக்கு முக்கியம் என்பதை தெரிந்துகொள்வோம்.

பெண்களுக்கு காய்ந்த தேங்காயின் நன்மைகள்

காய்ந்த தேங்காய் சாப்பிடுவது பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது. இதை தொடர்ந்து உட்கொண்டால், இதய நோய்களைத் தவிர்க்கலாம். மேலும், கர்ப்ப காலத்திலும் இதை உட்கொள்ளலாம். உலர் தேங்காய் பெண்களில் யுடிஐ பிரச்சனையிலிருந்து விடுபட உதவுகிறது.

இரும்பின் பற்றாக்குறை உள்ளது, உலர்ந்த தேங்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. தேங்காய் சாப்பிடுவது மாரடைப்பு அபாயத்தை குறைக்கிறது. மேலும் பெண்கள் தேங்காய் சாப்பிடுவதால் இதயத்தில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம்.

கீல்வாதம் நோய்

கீல்வாதம் பிரச்சனையை தவிர்க்க உலர் தேங்காயை உணவில் சேர்க்க வேண்டும். கால்சியம் இதில் காணப்படுகிறது, இது எலும்புகளை வலுவாக்குகிறது.

கர்ப்ப காலத்தில் உலர்ந்த தேங்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

கர்ப்ப காலத்திலும் உலர்ந்த தேங்காயை எளிதாக சாப்பிடலாம். இது பெண்களின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. இதனுடன், இது உங்கள் கருவுக்கும் நன்மை பயக்கும். தேங்காயில் கொழுப்பு அமிலங்கள் உள்ளன, இது குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

பால் அதிகரிக்கிறது

உலர்ந்த தேங்காயை உட்கொள்வது பாலூட்டும் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. ஏனெனில் அதன் நுகர்வு மார்பகங்களில் பால் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதனுடன், குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.

சிறுநீர் தொற்றைத் தடுக்கிறது

தேங்காய் உட்கொள்வதன் மூலம் சிறுநீர் தொற்று தவிர்க்கப்படும். இது பாக்டீரியாவின் வளர்ச்சியைத் தடுக்கிறது. தேங்காய் சாப்பிடுவதால் யுடிஐ போன்ற தீவிர தொற்றுகளையும் தடுக்கலாம்.

மேலும் படிக்க...

தேங்காய் மற்றும் கொப்பரை விலை வரும் நாட்களில் எப்படி இருக்கும்? TNAU கணிப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)