நம் உடலைக் குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய பல உண்மைகள் விசித்திரமானதாகவோ அல்லது வேடிக்கையானதாகவோ இருக்கும்.
அந்த வகையில், எப்போதாவது வரும் தும்மல், நமக்கு மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கக்கூடும் என்றால் நம்ப முடிகிறதா? உண்மை அதுதான்.
நாம் அனைவரும் குழந்தை பருவத்திலிருந்தே நம் உடலைப் பற்றி பல சுவாரஸ்யமான விஷயங்களைக் கேள்விப்பட்டிருக்கிறோம். சில சமயங்களில் அறிவியல் புத்தகத்தில் இருந்தும், சில சமயம் பொது அறிவு புத்தகத்திலிருந்தும், சில சமயம் டிவி மூலம் மனித உடலைப் பற்றி தெரிந்து கொள்கிறோம். ஆனால் பல சமயங்களில் நமது உடலைப் பற்றிய விஷயங்கள் உண்மையென்றாலும் நம்மால் நம்ப முடியாது.
உமிழ்நீர்
ஒரு மனிதனுக்கு தினசரி சுமார் 2 முதல் 4 சிட்டிகை உமிழ்நீரே உற்பத்தியாகிறது. மூக்கை அழுத்தி பிடித்துக் கொண்டு பேச முயற்சித்து பார்த்ததுண்டா? அது முடியாது என்பது ஆச்சரியமான விஷயம்.
எலும்பு முறிவு?
மிகவும் தீவிரமாக தும்மினால் விலா எலும்புகளுக்கு சேதம் ஏற்படலாம், எலும்பு முறிவுகள் கூட ஏற்படலாம். எனவே தான் சிறு அளவில் தும்மல் வந்தால் பரவாயில்லை, ஆனால் தும்மலை அடக்கக்கூடாது. தொடர்ந்து தும்மல் வருவது ஒரு விதமான வியாதி என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.
நாக்கு
ஒவ்வொரு நபரின் கைரேகைகளும் வித்தியாசமாக இருக்கும் என்பது தெரியும், ஆனால், ஒவ்வொரு நபரின் நாக்கின் அமைப்பும் வித்தியாசமானது என்பது உங்களுக்குத் தெரியுமா?
மரணம்
உண்ண உணவு இல்லையென்றால் மரணம் ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், உண்மையால், பசியைக் கூட தாங்கிக் கொண்ட ஓரளவு வாழ்ந்துவிடலாம். ஆனால், தூக்கம் இல்லாவிட்டால் அது விரைவில் மரணத்தை தந்துவிடும்.
மனிதனுக்கும் வாழைப்பழத்தின் மரபணுவிற்கும் இடையிலான ஒற்றுமை 60% க்கும் அதிகமாக உள்ளது. இந்தத் தகவல்களை டைம்ஸ் நவ் என்ற ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ளது. பலருக்குத் தெரியாத சில வேடிக்கையான உண்மைகள் இவை.
மேலும் படிக்க...