முன்பெல்லாம் அங்கொன்றும், இங்கொன்றுமாக இருந்து கருத்தரிப்பு மையங்கள் தற்போது வீதிக்கு ஒன்றாகப் பெருகிவிட்டன. இதற்கு காரணம், இளம் தம்பதிகளில் பலருக்கு குழந்தையின்மைப் பிரச்னை இருப்பதுதான்.
புத்ரபாக்கியத்தைக் காரணம் காட்டி, இந்த மருத்துவமனைகள் பல லட்சங்களைக் கொள்ளையடிக்கின்றன என்பதுதான் உண்மை.
அதேநேரத்தில் எத்தனை செல்வம் இருந்தாலும், குழந்தைச் செல்வம் கட்டாயம் வேண்டும் என்ற எண்ணத்தில் தம்பதிகளும், எத்தனை லட்சத்தையும் வாரி இறைத்துவிடுகின்றனர். அவ்வாறு பாலியல் பிரச்னையைச் சமாளிக்க மக்கள் வயாக்ராவையும் நாடுகிறார்கள். இது பல பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. எனவே இது போன்ற பக்கவிளைவுகளை தவிர்க்க மாதுளையின் உதவியை நாடலாம். தினமும் மாதுளை சாப்பிடும் பழக்கம் பலருக்கு இருக்கலாம். ஆனால், நீங்கள் மாதுளையை எப்போது, எப்படி சாப்பிடுகிறீர்கள் என்பது முக்கியம்.
இரவில் ஒரு கிண்ணம் மாதுளை
ஆண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு சில குறிப்பிட்ட வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் மிகவும் முக்கியம். இந்நிலையில், இரவில் தூங்கும் முன் ஒரு கிண்ணம் மாதுளை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
இது கருவுறுதல் மற்றும் பாலியல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. மாதுளையில் ஆக்ஸிஜனேற்றப் பண்புகள் உள்ளதால், இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகின்றன. அதாவது, உங்கள் பாலியல் வாழ்க்கையை மேம்படுத்த விரும்பினால், இரவில் தூங்கும் முன் ஒரு கிண்ணம் மாதுளை சாப்பிட வேண்டும்.
இஞ்சி
இது தவிர இஞ்சியையும் சாப்பிடலாம்.உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கும் சக்தி இதற்கு இருப்பதாக நம்பப்படுகிறது. உங்கள் உடலில் பாலுணர்வை அதிகரிக்க டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது ஆரோக்கியமான பாலியல் வாழ்க்கைக்கு அவசியமான ஹார்மோன் ஆகும்.
மேலும் படிக்க...
சர்க்கரை ரொம்பப் பிடிக்குமா? புற்றுநோய்க்கு வாய்ப்பு அதிகம்!
இரவில் தூங்கும் முன்பு 2 கிராம்பு+Hot water- ஆச்சர்யப்படுத்தும் நன்மைகள்!