நாகரீக வாழ்க்கையில், மொபைல், லேப்-டாப், டிவி என எல்லாமே எலக்ட்ரானிக் திரையாக மாறிவிட்டதால், எல்லா வகைகளிலும் நம் கண்களுக்குத் தான் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. முன்பெல்லாம் வயதான காலத்தில் மட்டுமே பார்க்கமுடிந்த சோடாபுட்டிக் கண்ணாடிகள், தற்போது 10ல் 5க்கும் மேற்பட்டோரின் கண்களைக் கணக்குப்போட்டுவிட்டது.
இந்நிலை தொடர்ந்தால், மரணப் படுக்கையில் கண்பார்வை இழப்பை அதிக மக்கள் எதிர்கொள்ள நேரிடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்தப் பிரச்னையில் இருந்து, அதாவது கண் பார்வை கோளாறு வராமல், தடுக்க நம் வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கப்படும் கொத்தமல்லி இலையேப் போதுமானது.
ஏனெனில், கொத்தமல்லியில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளதால், அவை நமது பார்வையை அதிகரிக்க உதவுகிறது.
கொத்தமல்லியை, நாம் தழையாகவும், விதையாகவும், பொடியாகவும் நம்முடைய அன்றாட சமையலில் பயன்படுத்தி வருகிறோம். இந்த அற்புத மூலப்பொருள் உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
கண்பார்வை
இந்த மூலிகையை உணவில் சேர்த்துக்கொள்வது ஒருவரின் பார்வைக்கு ஊக்கமளிப்பது மட்டுமல்லாமல், ஒரு நபருக்கு எந்த கண் வலியிலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது.
உடலுக்கு ஊட்டம்
பச்சை கொத்தமல்லி இலைகளில் மெக்னீசியம், வைட்டமின் ஏ, கால்சியம், வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கால்சியம் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.
நோய் எதிர்ப்புச் சக்தி
பச்சை கொத்தமல்லி சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. பச்சை கொத்தமல்லியில் உள்ள வைட்டமின் சி இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இரத்தத்தில் இரும்புச்சத்து குறைபாட்டையும் தடுக்க உதவுகிறது.
செரிமானம் (Digestion)
தினசரி உணவில் பச்சைக் கொத்தமல்லியைச் சேர்த்துக் கொள்வதால் செரிமான மண்டலம் சரியாக இயங்கி வாயு, மலச்சிக்கல், அஜீரணம் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடுகிறது. கொத்தமல்லியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது மலம் மற்றும் குடல் இயக்கத்திற்கு உதவுகிறது.
மேலும் படிக்க...
முட்டைக்குள்ளும் Diet இருக்கு- தெரியுமா உங்களுக்கு!
நோயாளி வயிற்றுக்குள் சிக்கிய கத்திரி- அறுவை சிகிச்சையில் நடந்த அலப்பறை!