இயற்கை நமக்கு அளித்த வரப்பிரசாதங்களில் பழங்கள் முக்கியமானவை. அதில், நமக்கு மலிவு விலையில் கிடைக்கும் பழங்களுக்கு எப்போது மவுசு குறைவுதான். ஆனால், இந்த பழம் இல்லாமல் அன்றாடச் சமையல் இல்லை. சாம்பார், ரசம், பொறியல் என எல்லாவற்றிலும், இந்தப் பழத்தைச் சேர்ப்பது வழக்கம். இதனைச் சேர்ப்பதால்தான், அந்த சமையலுக்கு சுவையேக் கிடைக்கிறது.
இதன் காரணமாகவே, இந்தப் பழத்தின் விலை திடீரென ராக்கெட் வேகத்தில் ரூ.100 யை எட்டும். திடீரென ரூ.10க்கும் கீழ் இறக்கும். இங்குக் குறிப்பிடுவது எந்தப் பழம் தெரிகிறதா? தக்காளிதான் அது? நோய்களில் இருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள,நோய் எதிர்ப்பு சக்தியை வளப்படுத்திக் கொள்வது அவசியம். இல்லையென்றால் நோய்களின் பாதிப்பில் இருந்து தப்பிப்பது கடினம். அந்த வகையில், வலுவான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்க தக்காளி பழச்சாறு குடிப்பது மிகவும் நல்லது.
சளிக்கு நிவாரணம்
பெரும்பாலான மக்கள் ஆண்டு முழுவதும் சளி, இருமல் மற்றும் சளி ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் பலவீனமாக இருப்பதன் காரணமாகவே, பருவகால நோய்கள் அவர்களை விரைவில் பாதிக்கிறது.
இந்த நோய்களைத் தவிர்ப்பதற்கான ஒரே வழி நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த வேண்டும். அதற்குத் தக்காளிப்பழம் தக்கவகையில் உதவுகிறது.
சத்துக்கள்
தக்காளியில் வைட்டமின்-ஏ மற்றும் வைட்டமின்-சி, நார்ச்சத்து, ஃபோலேட் மற்றும் கால்சியம் போன்ற பல ஊட்டச்சத்துகள் உள்ளன. அவை உடலில் ஆன்டி-ஆக்ஸிடன்டாக செயல்படுகின்றன. இதனால் தக்காளி ஜூஸைக் குடித்து வந்தால், நோய் எதிர்ப்பு மண்டலம் பலமாகும். நோய் உபாதைகளில் இருந்தும் விடுபடலாம்.
தக்காளி ஜூஸின் 4 நன்மைகள்
-
தக்காளி சாறு நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்.
-
தொடர்ந்து சாப்பிட்டால் சளி, இருமல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
-
தக்காளி சாறு உட்கொள்வதும் எலும்புகள் வலுவாகும்.
பெண்கள் தக்காளி ஜூஸ் குடிப்பதால் மார்பகப் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கலாம்.
மேலும் படிக்க...
முட்டைக்குள்ளும் Diet இருக்கு- தெரியுமா உங்களுக்கு!
நோயாளி வயிற்றுக்குள் சிக்கிய கத்திரி- அறுவை சிகிச்சையில் நடந்த அலப்பறை!