Health & Lifestyle

Sunday, 04 October 2020 11:10 AM , by: Elavarse Sivakumar

தலைவலி முதல்  அஜீரணம் வரை அத்தனை நோய்களுக்கும் மருந்தாக அமையும்,  மூலிகை எது தெரியுமா? அதுதான்  கிராம்பு. மருத்துவ மூலிகையான கிராம்பு (Clove) சமையலில் நறுமணப் பொருளாகப் யன்படுத்தப்படுகிறது.

இதில் கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன.

ஊடுபயிராக வளர்க்கலாம் (Intercropping)

வெப்ப மண்டலப் பயிரான கிராம்பு, நல்ல வெதுவெதுப்பான, ஈரப்பதம் உள்ள சூழ்நிலையில் நன்கு வளரும். நிழலில் வளரக்கூடிய இந்தப் பயிரை, தென்னை, காப்பி, தேயிலை ஆகிய பயிர்களின் இடையில் ஊடுபயிராகவும் பயிர் செய்யலாம்.

கிராம்பின் மொட்டு, இலை,தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. இதற்கு அஞ்சுகம், உற்கடம், கருவாய்க்கிராம்பு, சோசம், திரளி, வராங்கம் என்ற பல பெயர்களும் உண்டு.

மருத்துவப் பயன்கள் (Medical Benefits)

  • பல் வலி, தேள்கடி, விஷக்கடி, கோழை, வயிற்றுப் பொருமல் போன்றவற்றைக் குணமாக்கப் பயன்படுகிறது.

  • வயிற்றில் சுரக்கும் சீரண அமிலத்தைச் சீராக்கும்.

  • ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை ஊக்குவிப்பதால், ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.

  • இரத்தத்தை நீர்த்துப் போகச்செய்து, கொழுப்பைக் குறைக்கும்.

  • வாயில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்க உதவும் என்பதாலேயே பற்பசைகளில் பயன்படுத்தப்படுகிறது.

  • உடலைப் பருமனடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கும், சூட்டைச் சமப்படுத்தவும், இரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் உதவும்.

 

  • கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும்.

  • நான்கு கிராம் கிராம்பை, மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் காலரா குணமடையும்.

  • சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.

  • கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.

  • முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.

  • 3-5 துளி நல்லெண்ணெயில் ஒரு கிராம்பை சூடு காட்டி அந்த எண்ணெயை வலியுள்ள காதில் இட்டால் சுகம் கிடைக்கும்.

  • தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண் ணெயைத் தடவினால் படிப்டிபயாகக் குணமாகும்.

  • கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி பறந்துவிடும்.

  • தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால் தலைபாரம் குறைந்து குணம் கிடைக்கிறது.

  • கண் இமைகளில் ஏற்படக்கூடிய அழற்சிகளை போக்க கிராம்பை நீரில் உரசி அந்த நீரைப் பயன்படுத்தினால் குணம் கிடைக்கும்.

தகவல்
அக்ரி. சு.சந்திரசேகரன்
வேளாண் ஆலோசகர்
அருப்புக்கோட்டை
9443570289

மேலும் படிக்க...

கால்நடைகளுக்கான தாதுப்புக் கட்டிகள் - வீட்டிலேயேத் தயாரித்து வருமானம் ஈட்டலாம் வாங்க!!

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்- தமிழகம் முழுவதும் இன்று செயல்படுகின்றன!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)