1. செய்திகள்

கால்நடைகளுக்கான தாதுப்புக் கட்டிகள் - வீட்டிலேயேத் தயாரித்து வருமானம் ஈட்டலாம் வாங்க!!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Livestock Nutrient Tumors - Make It Profitable At Home!

Credit : Tamil Vivasayam

கிராம மக்களின் வாழ்வாதாரமாக விளங்குவது விவசாயம். அதற்கு உறுதுணையாக இருக்கும் தொழில் என்றால் அது கால்நடை வளர்ப்புதான்.ஏனெனில், விவசாயிகளின் பொருளாதார வளர்ச்சிக்கு இவை அடித்தம் அளிக்கின்றன. சில வேளைகளில் விவசாயம் கைவிட்டாலும் கால்நடைகள் கைவிடுவது இல்லை. ஏனெனில் உண்மையில் கால்நடைகள்கள் நமக்கு, நடமாடும் வங்கிகள். அப்படிப்பட்ட கால்நடை களை ஆரோக்கியமான முறையில் வளர்ப்பதற்கு வர அடர்தீவனங்களுடன் தாது உப்புக்கள் தேவைப்படுகின்றன.

ஆனால் தனித்தன்மை வாய்ந்த தாதுப்புகள் சிலவேளைகளில் கால்நடைகளுக்கு சரிவரக் கிடைப்பதில்லை. அதனைப் பெறுவதற்காக, கன்றுகள் மாடுகளின் சிறுநீரை குடிக்கினறன. இதனால் சில வேளைகளில் நோய் வாய் பட்டு இறக்கும் சூழ் நிலை உருவாகும்.

வீட்டில் தயாரிக்கலாம் ( Home Made)

இதை தடுத்துக் காக்கும் வகையில், தாது உப்புக் கட்டிகளை வீட்டிலேயே தயாரிக்கலாம். நாமும் பயன்படுத்தி மற்றவர்களுக்கு விற்பனை செய்ய முடியும். இதனால் கூடுதல் வருமானம் பெற வாய்ப்பு உள்ளது.

இந்த கொரோனா காலத்தில் மகளிர்க்கு சரியான வேலை வாய்ப்பு இல்லை. எனவே தாது உப்பு தூளை கட்டி யாக‌ மாற்றி உற்பத்தி செய்தால் கால்நடைகளுக்கு தேவைப்படும் போது அவை நாக்கினால் நக்கி சாப்பிடும். பல வேளைகளில் கட்டிகள் வீணாவதுமில்லை.

தயாரிப்புமுறை:

டான்வாஸ்தாதுஉப்பு கலவை ரூ.25/- பாக்கெட்
சாதாரண உப்பு ரூ. -63/- பாக்கெட்
சோடியம் பென்டோனைட் ரூ.-12/- பாக்கெட்

செய்முறை (Preparation)

அனைத்துப் பொருட்களையும் எடுத்து, அவற்றில் தண்ணீர் விட்டு கலந்து நன்கு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். இந்தக் கலவையை ஒரு கிலோ அளவுக்கு எடுத்து கொள்ளவும்.பிறகு தாது உப்பு கட்டி தயாரிக்கும் அச்சு களில்இட்டு கலவையை, சூடான இரும்பு தகடால் அழுத்தம் கொடுக்க வேண்டும். நன்கு உலர்ந்த பின்பு, பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யலாம்.

தாது உப்பு கட்டிகளின் நடுவே ஒரு துவாரம் இருக்கும். இந்த துவாரத்தில் கயிற்றில் கட்டி மாட்டு கொட்டைகளில் கால் நடை களின் நாவிற்கு எட்டும் உயரத்தில் கட்டித் ‌‌தொங்க‌விடலாம்.

அவை விரும்பும்போது, நாக்கினால் நக்கி‌‌க் கொள்ளும். இதனால் தாதுஉப்புகள் விரயம் ஆவதும் தவிர்க்கப்படுகிறது. நாமே வீட்டில் தயாரிப்பதால், ஒரு மன‌நிறைவு எற்படுவதுடன் விற்பனை செய்வதின் மூலம் கூடுதல் வருமானமும் சம்பாதிக்க முடியும்.எனவே கால் நடை வளர்ப்பில் ஈடுபடும் பெண்கள், இது போன்ற கூடுதல் தொழில் செய்துஅதிக வருமானம் சம்பாதிக்க முடியும்.

தகவல்
அக்ரி சு சந்திரசேகரன்
வேளாண் ஆலோசகர்
அருப்புக்கோட்டை
9443570289

மேலும் படிக்க...

விலையில்லா கறவைப்பசுக்கள், வெள்ளாடுகள் வழங்கும் திட்டம்- விவசாயிகளுக்கு அழைப்பு!

கோழிகளைத் தாக்கும் வெள்ளைக் கழிச்சல் நோய்- நிவாரணம் தரும் இயற்கை மருந்துவம்!

English Summary: Livestock Nutrient Tumors - Make It Profitable At Home!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.