ஒரு காலத்தில் செய்த தவறுக்கு தண்டனையாக போடப்பட்டத் தோப்புக்கரணம், உடல் ஆரோக்கியத்திற்கு பல வகைகளில் வித்திடுகிறது என்றால் நம்ப முடிகிறதா உங்களால்! ஆனால் உண்மை அதுதான் என்பதால், நம்பித்தான் ஆகவேண்டும்.
உடல் பயிற்சி (Physical training)
உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதை நாள்தோறும் கருதி கருதி செய்ய வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுவிட்டோம். ஏனெனில், தற்போதைய கொரோனா கால, லாப்டாப் வாழ்க்கையே இதற்கு காரணம்.
எனவே உடல் ஆரோக்கியத்திற்காக எதை செய்யலாம் என யோசிப்பவரா நீங்கள்? அப்படியானால் இந்தத் தகவல் உங்களுக்குத்தான்.
தண்டனையாக (As punishment)
பல ஆண்டுகளாக நமக்குத் தெரியாமலேயே நாம் செய்துவரும் யோகாசனம்தான் இந்த தோப்புக்கரணம். முன்பெல்லாம் பள்ளியிலோ, வீட்டிலோத் தவறு செய்துவிட்டால் அதற்குத் தண்டனையாகத் தோப்புக்கரணம் போடச் சொல்வார்கள்.
பெயர்க்காரணம் (Nomenclature)
தோல்வியை, குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்கும் விதத்தில் போடும் தோற்புக்கரணம் என்பதுதான் பின்னாளில் தோப்புக்கரணம் என மருவியது.
சூப்பர் பிரெயின் யோகா (Super Brain Yoga)
நாம் மற்ற உடற்பயிற்சிகளைச் செய்யாவிட்டாலும், இதை மட்டும் தொடர்ந்து செய்து வந்தாலே போதும். பல நன்மைகளை அடைய முடியும். அதனால்தான் இதனை வெளிநாடுகளில் சூப்பர் பிரெயின் யோகா என்றுக் குறிப்பிடுகின்றனர்.
செய்முறை (Method)
-
நம்முடையத் தோள்பட்டை அகலத்திற்குக் கால்களைப் பிரித்து வைத்து நிற்க வேண்டும். இடது கையை மடக்கி, இடது கையின் பெருவிரலால், வலது காதுமடலின் நுனியைப் பிடித்துக்கொள்ள வேண்டும்.
-
வலது கையை மடக்கி, வலது கையின் பெருவிரலால் இடது காது மடலின் நுனியைப் பிடித்துக்கொள்ள வேண்டும்.
-
அப்படிப் பிடிக்கும்போது, கட்டைவிரல் காதின் முன்புறமும், ஆள்காட்டி விரல் காதின் பின்புறமும் இருக்க வேண்டும்.
-
வலது கையானது, இடது கையின் மேல் இருப்பது அவசியம். இரு கால்களையும் மடக்கி, முதுகை வளைக்காமல் உட்காரும் நிலையில், தோப்புக்கரணம் போட வேண்டும்.
-
உட்காரும் நிலை நம்மால் எவ்வளவு முடிகிறதோ அவ்வளவு செய்யலாம்.
-
எழும்போது மூச்சை வெளியே விட்டபடி எழ வேண்டும். இதனால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.
மருத்துவப் பயன்கள் (Medicinal uses)
தூண்டல்
தோப்புக்கரணம் போடும்போது நமது காது மடல்களைப் பிடித்துக்கொள்கிறோம். அப்போதுதான் உடலின் எல்லா உறுப்புகளும் செயல்படுவதற்கானத் தூண்டுதல் கிடைக்கும்.
சீரான ரத்த ஓட்டம் (Balanced blood flow)
உட்கார்ந்து எழும்போது, காலில் இருக்கக்கூடிய சோலியஸ் என்னும் தசை இயங்க ஆரம்பிக்கிறது. இதனால் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகும்.
காதுகளில்தான் இதயம், சிறுநீரகம், மூளை, வயிறு, கண்கள், கீழ் மற்றும் மேல் தாடை, ஈரல், காதின் நரம்பு எனப் பல்வேறு உறுப்புகளின் தொடர்புப் புள்ளிகள் அமைந்துள்ளன. எனவே தோப்புக்கரணம் போடும்போது, இந்த எல்லா உறுப்புகளுமே பயன்பெறுகின்றன.
நினைவுத்திறன் (Memory)
இதன்மூலம் மூளையின் நியூரான் செல்கள் புத்துணர்ச்சி அடைகின்றன.
எனவே மூளை சுறுசுறுப்பு அடைந்து நினைவுத்திறன் பன்மடங்கு அதிகரிக்கிறது.
மன அழுத்தம் (mental stress)
தோப்புக்கரணத்தைத் தொடர்ந்து போடும்போது, மன இறுக்கம், மன அழுத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் குறைகின்றன.
எலும்பு (Bone)
இப்பயிற்சியால் இடுப்பில் உள்ள எலும்பு, தசை, ஜவ்வு உள்ளிட்டவை வலுவடைகின்றன. இதனால் இடுப்பு வலி வராமல் தடுக்க முடியும்.
பிரசவம் எளிதாக (Easy delivery)
கர்ப்பிணிகள் ஒரு நாளைக்கு 5 முதல் 6 தோப்புக்கரணம் போடுவதன் மூலம் பிரசவம் எளிதாகும். கர்ப்பப்பையின் சுருங்கி விரியும் தன்மை அதிகரித்து, சுகப்பிரசவத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
தொப்பை குறைய (Lower the belly)
குடல் பகுதிக்குத் தேவையான இயக்கம் கிடைப்பதால், மனிதனால் கழிவை எளிதில் வெளியேற்றிட முடியும். அதே சமயம் தோப்புக்கரணத்தைத் தொடர்ந்து செய்து வந்தால், தொப்பையும் குறையும்.
ஆக இதன் மூலம் தோற்றதன் அடையாளமாகப் போடப்பட்டத் தோப்புக்கரணத்தைக் கொண்டு, வெற்றிகரமான, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும்.
மேலும் படிக்க...
உடல் நலத்திற்கு என்றுமே சிறந்தது உணவே மருந்து தான்
நமக்கு அதிக கொலஸ்ட்ரால் இருக்கும்போது நம் உடல் காட்டும் அறிகுறிகள்