குளிர்ச்சியான பானங்கள் மற்றும் ஐஸ்கிரீம்கள் என கோடைக் கால வெயில் நம்மைத் தூண்டுகின்ற அதே வேளையில், பழங்களை சிற்றுண்டி போல அவ்வப்போது சாப்பிடுவது உடலை ஹைட்ரேட் செய்வதற்கான சிறந்த வழியாகும். வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்கள் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல; உங்கள் மன நலத்திற்கும் நன்மை பயக்கும். கூடுதலாக, அவை பொதுவாக குறைந்த கலோரிகளைக் கொண்டிருக்கின்றன. இது எடை இழப்புக்கு பயனுள்ளதாக இருக்கும்.
தர்பூசணி
100 கிராம் அல்லது தர்பூசணியில் சுமார் 30 கலோரிகள் மற்றும் 91% தண்ணீர் சத்து உள்ளது. எனவே, இது மிகவும் நீரேற்றம் கொண்ட பழம், வைட்டமின் சி, பொட்டாசியம், தாமிரம், வைட்டமின் பி5 மற்றும் வைட்டமின் ஏ ஆகியவற்றின் நல்ல மூலமாக இது விளங்குகிறது. உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால் இது சாப்பிடுவதற்குச் சிறந்த பழங்களில் ஒன்றாகும்.
பெர்ரீஸ்
ஒவ்வொரு 100 கிராம் பெர்ரிகளிலும், 33 கலோரிகள் உள்ளன. நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் பாலிஃபீனால்கள் அதிகம் உள்ளன. அவை அற்புதமான ஊட்டச்சத்து மதிப்பைக் கொண்டுள்ளன. இது நாள்பட்ட நோய்களைத் தடுக்க உதவுகிறது. அதிக நீர்ச்சத்து கொண்ட இது ஒரு சிறந்த சிற்றுண்டியாக இருக்கிறது. குறிப்பாக, எடை இழப்பு செய்து கொண்டு இருந்தால் இதை உண்ணுதல் நல்ல பலனைக் கொடுக்கும்.
கிர்னிப்பழம்
100 கிராம் முலாம்பழத்தில் (கிர்னிப்பழம்) 34 கலோரிகள் உள்ளன. இது பூஜ்ஜிய கொழுப்பு, அதிக நார்ச்சத்து வைட்டமின் சி மற்றும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகளுடன் நிரம்பியுள்ளது. இது 90% க்கும் அதிகமான தண்ணீரைக் கொண்டிருப்பதால், இது உங்களை மணிக்கணக்கில் நீரேற்றமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியமற்ற பசியைத் தடுக்கிறது.
கிரேஃப் புரூட்
கிரேஃப் புரூட்டில் கலோரிகள் மிகவும் குறைவு. ஒவ்வொரு 100 கிராம் பழத்திலும் 42 கலோரிகள் உள்ளன. இதில் கொழுப்பு இல்லை. வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இது சிற்றுண்டிக்கு ஆரோக்கியமான பழமாக அமைகிறது. மேலும், 88% நீர்ச்சத்தைக் கொண்டுள்ளது. இது நீரேற்றம் மற்றும் எடை இழப்புக்கு சிறந்தது.
மேலும் படிக்க
பழங்களின் வகைகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள்
100% புதுப்பிக்கத்தக்க ஆற்றலுடன் ஃபெர்டிகுளோபல் டிரான்ஸ்ஃபார்மிங் உர உற்பத்தி