Health & Lifestyle

Thursday, 12 May 2022 11:13 AM , by: Elavarse Sivakumar

நம் உடலில் ஏற்படும் வலிகளில் காது வலி சற்று வித்தியாசமானது. ஏனெனில் இது நேரடியாக மூளையோடு தொடர்புடையது. அதனால், காது வலி நமக்கு மிகுந்த வேதனையைத் தரக்கூடியது.

இதுபோன்ற பிரச்சனைகளில் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது எப்போதும் நல்லது. ஆனால் மருத்துவ மனைக்குச் செல்ல முடியாவிட்டால், வீட்டிலேயே அதை சரிசெய்ய விரும்பினால், சில வழிகள் உள்ளன.
எனவே அவற்றில் 5 வழிகளைப் பட்டியலிடுகிறோம்.

தூங்கும் முறை

காது வலிக்கு, நாம் தூங்கும் முறையும் காரணம். ஒரு பக்கமாக படுத்துறங்கும்போது காதுகள் மீது அழுத்தம் அதிகமாக இருந்தால் வலி ஏற்படும். அதனால் தூங்கும் நிலை மிகவும் முக்கியம். அதில் கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள்.

ஐஸ் பாக்கெட்

சூடான ஒத்தனம் சில வலிகளுக்கு நிவாரணம் கொடுப்பது போல், ஐஸ்பாக்கெட்டுகளும் சில வலிகளுக்கு நிவாரணம் கொடுக்கும். அந்தவகையில் காது வலி இருக்கும்போது ஐஸ் பாக்கெட்டை குறிப்பிட்ட இடத்தில் வைத்தால் வலி சரியாக வாய்ப்புகள் உள்ளன. அதிக சூடு காரணமாக கூட வலி ஏற்பட்டிருக்கலாம். அப்படி இருந்தால் இது உங்களுக்கு உதவும்.

வெந்நீர் ஒத்தடம்

ஐஸ் பாக்கெட் ஒத்தடம் போலவே வெந்நீர் ஒத்தனமும் கொடுக்கலாம். காதில் ஏற்பட்டிருக்கும் சுருக்கம் காரணமாக அல்லது தசை இறுக்கம் காரணமாக கூட வலி ஏற்படலாம். இத்தகைய நேரத்தில் துணி ஒன்றை எடுத்து வெதுவெதுப்பான நீரில் நனைத்து காது மற்றும் அதனை சுற்றியிருக்கும் பகுதிகளில் சிறிது நேரம் ஒத்தடம் கொடுக்கலாம். இது உங்களுக்கு ரிலாக்ஸைக் கொடுக்கும்.

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெய் காது வலியையும் குணப்படுத்தும். வலி இருக்கும் சமயங்களில் காதுகளில் சில துளிகள் ஆலிவ் எண்ணெயை வைத்தால், நிவாரணம் கிடைக்கும்.

சூயிங்கம்

பல சமயங்களில் விமானப் பயணத்தின் போது காதுகளில் கடுமையான வலி ஏற்படும். அத்தகைய நிலையில், நீங்கள் சூயிங்கம் மெல்லலாம். அவ்வாறு செய்வதன் மூலம் வலியிலிருந்து விடுபடலாம்.

மேலும் படிக்க...

பிச்சை எடுக்க தினமும் ரூ.2,000 சம்பளம்-அதிர வைக்கும் Offer!

சொர்ணவாரி சாகுபடிக்குச் சிக்கல்-விவசாயிகள் வேதனை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)