1. செய்திகள்

பிச்சை எடுக்க தினமும் ரூ.2,000 சம்பளம்-அதிர வைக்கும் Offer!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Rs 2,000 daily salary for begging - shocking offer!

திருப்பூரில் பிச்சை எடுக்க வந்த நபரை நாளொன்றுக்கு ரூ.400 சம்பளத்தில் வேலை தருகிறேன் செய்ய விருப்பமா? என்று கேட்ட வியாபாரியிடம் உனக்கு 2 ஆயிரம் ரூபாய் சம்பளம் தருகிறேன் நீ பிச்சை எடுக்க வா என அழைத்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் கடைவீதியில் ஏராளமான நபர்கள் தினமும் பிச்சை எடுப்பது வழக்கம். இந்நிலையில் சாட்டையால் அடித்துக் கொண்டு பிச்சை எடுத்த நபர் ஒருவர் இருசக்கர வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையில் பிச்சை வாங்கச் சென்றுள்ளார்.

அப்போது, அந்தக் கடையின் உரிமையாளர், கை கால்கள் நன்றாக தானே இருக்கிறது, என் கடைக்கு வேலைக்கு வா சம்பளம் தருகிறேன் என கூறி உள்ளார். சம்பளம் எவ்வளவு தருவாய் என அந்த பிச்சை எடுக்கும் நபர் கேட்டபோது 400 ரூபாய் ஒரு நாளைக்கு தருகிறேன் என பதிலளித்துள்ளார்.

அதற்கு அந்த பிச்சை எடுத்த நபரோ, 400 ரூபாய்க்கு நான் வேலை செய்ய வேண்டுமா? நான் ஒரு நாளைக்கு 2000 சம்பாதிக்கிறேன் என ஏளனமாக பதில் அளிக்கிறார். அதற்கு உரிமையாளர், இரக்கப்பட்டு இப்படி ஓசில கொடுக்கக் கொடுக்க நீ சம்பாதிக்க தான் செய்வாய் என கூறுகிறார்.

பிச்சை கொடுப்பதாக இருந்தால் இருக்கு என சொல்லுங்கள். இல்லை என்றால் இல்லை என சொல்லுங்கள். நீ வா என்னோடு உனக்கு 2000 தருகிறேன் எனக் கூறியபடி அந்த பிச்சை எடுக்கும் நபர் அங்கிருந்து செல்கிறார். கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகிய இந்த காட்சிகள் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் படிக்க...

இனிப்புக்காக உலர் திராட்சை -ஆரோக்கியத்திற்கு அத்தனை கேடு!

சொர்ணவாரி சாகுபடிக்குச் சிக்கல்-விவசாயிகள் வேதனை!

English Summary: Rs 2,000 daily salary for begging - shocking offer! Published on: 12 May 2022, 10:49 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.