Health & Lifestyle

Sunday, 25 July 2021 11:13 AM , by: Elavarse Sivakumar

குழந்தைகளுக்காகப் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டுள்ள கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை முடிவடைந்து செம்படம்பர் மாதம் முடிவுகள் வெளியாகும் என, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

கொலைகாரக் கொரோனா (The killer corona)

உலக நாடுகளை உலுக்கி எடுத்துவரும் கொடூரக் கொரோனா, இந்தியாவிலும் தன் கோரத் தாண்டவத்தை அரங்கேற்றி வருகிறது.

தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள், இரவு நேர ஊரடங்கு, தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு என பல அதிரடி நடவடிக்கைகள் மூலம் கொரோனா பாதிப்புகளைப் படிப்படியாகக் குறைத்து வருகின்றன.

தடுப்பூசி (Vaccine)

குறிப்பாக மத்திய அரசின் சீரிய முயற்சியால், நாடு முழுவதும் தடுப்பூசித் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. முதியவர்களுக்கு ஆரம்பித்து, 45 வயதிற்கு மேற்பட்டவர்கள், 45 வயதிற்கு உட்பட்டவர்கள், 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் என அனைவரும் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

கொரோனா 3-வது அலை (Corona 3rd wave)

முன்னதாக ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் குழந்தைக் குறிவைத்துத் தாக்கும் கொரோனா 3-வது அலை தொடங்கிவிடும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதன் காரணமாகக் குழந்தைகளுக்கானத் தடுப்பூசி எப்போது செயல்பாட்டிற்கு வரும் என்பது பெற்றோரின் பெரும் கவலையாக இருந்து வருகிறது.

ஜூன் 7ம் தேதி (June 7th)

இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் ரண்தீப் குலேரியா தெரிவித்திருப்பதாவது:
ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் குழந்தைகளுக்காக தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசியை குழந்தைகளுக்கு வழங்கி பரிசோதிக்கும் சோதனையை மேற்கொண்டு வருகிறது. இந்தப் பரிசோதனை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த ஜூன் 7ம் தேதி தொடங்கியது.

மத்திய மருந்துத் தரக்கட்டுப்பாடு அமைப்பின் வல்லுநர் குழு அனுமதியளித்து உள்ளதைத் தொடர்ந்து இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. எனவேக் குழந்தைகளுக்காகப் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டுள்ள கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை முடிவடைந்து செம்படம்பர் மாதம் முடிவுகள் வெளியாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய வகை பூஞ்சை நோய் (New type of fungal disease)

இதனிடையே அமெரிக்காவில் புதிதாக கேண்டிடா என்ற ஆரிஸ் என்ற ஒரு வகை பூஞ்சை நோய் பரவி வருகிறது. இந்த பூஞ்சை தொற்று ரத்த ஓட்டத்தை பாதித்து மரணத்தை ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்தானது.

அமெரிக்க சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ள தகவலின்படி இதுவரை வாஷிங்டனில் 101 பேருக்கும், டல்லாஸ் மருத்துவமனைகளில் 22 பேருக்கும் கேண்டிடா ஆரிஸ் தொற்று உள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அறிகுறிகள் (Symptoms)

காய்ச்சல் மற்றும் குளிர் ஆகியவை கேண்டிடா ஆரிஸ் நோய்த்தொற்றின் பொதுவான அறிகுறிகளாகும்.

சிகிச்சைக்கு பலன் இல்லை (There is no benefit to treatment)

நோய் பாதித்தவர்களுக்கு ஆன்டிபயாடிக் சிகிச்சை அளித்தபோதும் உடல்நிலை சீரடையவில்லை என அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவித்துள்ளன.

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வரும் நிலையில், இந்த புதிய தொற்று மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க...

தினமும் ஒரு பச்சை வெங்காயம்: நன்மைகளோ ஏராளம்!

பால் குடிப்பதால் சர்க்கரை நோய் வருவதில்லை! ஆய்வில் தகவல்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)