Health & Lifestyle

Sunday, 27 March 2022 08:45 PM , by: Elavarse Sivakumar

அன்னாசியில் உள்ள நார்ச்சத்துக்கள் ஜீரண மண்டலத்தை வலுப்படுத்தச் செய்வதுடன், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைக்கவும் உதவுகிறது.

உடல் ஆரோக்கியம் என வரும்போது, பழங்களுக்கும், காய்கறிகளுக்கும் அதிகப் பங்கு உள்ளது. அதிலும் தற்போது கோடைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், நாள் தோறும் விதவிதமான பழங்களைக் கொண்டு ஜூஸ் தயாரித்துக் குடிப்பது, ஆரோக்கியத்தைத் தக்கவைத்துக்கொள்ள உதவும்.

கொளுத்தும் கோடையை சமாளிக்கப் பழச்சாறுகள் உதவும் என்றபோதிலும், எந்தப் பழத்தை நாம் தேர்வு செய்கிறோம் என்பது மிக மிக முக்கியம். அந்த வகையில், நா வறட்சியைப் போக்குவதுடன், உடலில் சேரும் கொழுப்பையும் கரைக்க உதவுகிறது அன்னாசிப் பழம். நோய்க் கிருமிகளுக்கு எதிராக செயல்பட்டு உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் தன்மை கொண்ட ஒரு பழமாகவும் அன்னாசிப்பழம் திகழ்கிறது.

ஜீரண சக்தி

அன்னாசி பழத்தில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே இந்தப் பழத்தைச் சாப்பிடுவது, ஜீரண மண்டலத்தினை வலுப்படுத்துகிறது. மேலும், நார்ச்சத்துகள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்கக் கூடியவை என்பதால், உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது .

கண்பார்வை

அன்னாசிப்பழத்தில் வைட்டமின்-ஏ சத்துக்கள் அதிக அளவில் நிறைந்திருப்பதால், இது பார்வை குறைபாடு ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. மேலும் பார்வைக் கோளாறு, மாலைக் கண் நோய் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமலும் தடுக்கிறது.

ரத்த அழுத்தம்

அன்னாசியில் அதிக அளவில் பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளதால், அவை ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. ரத்த அழுத்தத்தைக் குறைக்க பொட்டாசியம் நிறைந்த உணவுகள் மிக முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது.

நோய் எதிர்ப்பு சக்தி

அன்னாசி பழத்தில் வைட்டமின்-சி சத்துக்கள் அதிக அளவில் காணப்படுகிறது. அதேசமயம் நோய் எதிர்ப்பு சக்தியும் நிறைந்துள்ளது. இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவடையும். உடல் காயங்களும் வெகு விரைவில் ஆறும். இவற்றில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் எலும்புகளின் வலிமையை அதிகரிக்கிறது.

மேலும் படிக்க...

வயிற்றின் நண்பன்- அத்தனை நோய்க்கும் அருமருந்து- அது எது?

நிலத்தடி நீர் குறையும் அபாயம்- விவசாயிகள் கவனத்திற்கு!

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)