Health & Lifestyle

Friday, 29 October 2021 07:22 AM , by: Elavarse Sivakumar

Credit : Isha

தீபாவளியை ஈஷா சார்பில் நவம்பர் மாதம் 3 நாள் யோகா பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியேப் பங்கேற்கலாம்.

தீபாவளி பண்டிகை (Deepavali festival)

தீபத்திருநாளாம் தீபாவளிப் பண்டிகை வரும் நவம்பர் 4ம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. இந்த நன்நாளை முன்னிட்டு ஈஷா சார்பில் ‘உயிர் நோக்கம்’ என்ற யோகா வகுப்பு ஆன்லைன் மூலம் தமிழக மக்களுக்கு இலவசமாக நடைபெற உள்ளது.

3 நாள் பயிற்சி (3 day training)

நவம்பர் 12-ம் தேதி முதல் நவம்பர் 14-ம் தேதி வரை இந்த யோகப் பயிற்சி நடத்தப்பட உள்ளது.

நேரம் தேர்வு (Choose the time)

காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை, மதியம் 11 மணி முதல் 1 மணி வரை, மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை என 3 வேளைகளில் இவ்வகுப்பு தினமும் 2 மணி நேரம் நடத்தப்படும். பங்கேற்பாளர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப இதில் ஏதேனும் ஒரு நேரத்தைத் தேர்வு செய்து கொள்ளலாம்.

யார் பங்கேற்கலாம்? (Who can participate?)

12 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வயதினரும் இவ்வகுப்பில் கலந்து கொள்ளலாம். இதில் கற்றுக்கொடுக்கப்படும் யோகா பயிற்சிகளை தினமும் செய்து வருவதன் மூலம் முதுகுத்தண்டு வலுப்பெறும். மூட்டு வலியில் இருந்து விடுதலை பெறுவதுடன், மன அழுத்தமும் குறையும். பலவித நன்மைகளை அடைவதுடன், உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

முன்பதிவு (Booking)

இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் முன்பதிவு செய்வது அவசியம்.
isha.co/uno-pb என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்ய உதவி தேவையெனில் 7383673836 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் செய்யலாம்.

கடைசித்தேதி (Deadline)

முன்பதிவு நவம்பர் 5-ம் தேதி இரவு 9 மணியுடன் நிறைவு பெறும் என்பதால், யோகா பயிற்சியில் கலந்துகொண்டுப் பயனடைய விரும்புபவர்கள், முன்கூட்டியேத் தங்கள் பெயர்களை முன்பதிவு செய்யுமாறு ஈஷா யோகா மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க...

ரிக்ஷா ஓட்டுனருக்கு ரூ.3 கோடிக்கு வருமான வரி நோட்டீஸ்- அடக் கொடுமையே!

பட்டாசு வடிவில் சாக்லேட்டுகள்- தீபாவளியையொட்டி விற்பனை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)