பிரஷர், சுகர் என்பது வயது வித்தியாசம் இல்லாமல் எல்லோரையும் தாக்கும் குறைபாடாக மாறி வருகிறது. ஆனால், நம் முன்னோர்களுக்கு சர்க்கரை இருந்திருக்கிறது என்பது தெரியவந்தால், நமக்கும் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு, முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது. அதையும் மீறி நீரிழிவு நோய் வந்துவிட்டால் கவலைப்படவேண்டாம்.
அவ்வாறு, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவும் காய்கறிகள் மற்றும் பழங்கள் உள்ளன. அவற்றைக் கட்டாயம் நம் உணவில் சேர்த்துக்கொண்டால் போதும்.
நீரிழிவு நோயாளிகள் பெரும்பாலும் சீரான மற்றும் மிதமான உணவை எடுக்க வேண்டும். அவர்களுக்கு பொதுவாக நெல்லிக்காய், பாகற்காய் போன்ற காய்களும் கனிகளும் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், இவற்றைத் தவிர பலருக்கும் தெரியாத சில காய்கனிகள் ரத்த சர்க்கரையை, அதுவும் உணவு உண்பதற்கு முன்னதான சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.
நீரிழிவு நோயாளிகள் இந்த 5 பொருட்களைக் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ரத்த சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். இந்த உணவுகள் சுவையானதாக இருப்பதால் விரும்பி சாப்பிடலாம்.
வாழைக்காய்
நீரிழிவு நோயாளிகளுக்கு வாழைக்காய் மிகவும் நன்மை பயக்கும். வாழைப்பழத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும், ஆனால் வாழைக்காயில் சர்க்கரை அளவு மிகவும் குறைவாக உள்ளது. இதிலுள்ள கிளைசெமிக் இன்டெக்ஸ் (ஜிஐ) 55 க்கும் குறைவாக உள்ளது, இது செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
பாகற்காய்
நீரிழிவு நோயாளிகளுக்கு பாகற்காய் மிகவும் நன்மை பயக்கும். உண்மையில் இது நீரிழிவு நோய் உள்ளவர்களின் உணவுக்கு முந்தைய இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க நல்ல காய் என்று கூறப்படுகிறது.
பாகற்காய் செரிமானம் ஆவதும் மிகவும் எளிதானது. அத்துடன் இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் பாகற்காயை வேகவைத்துக் கொள்ளவும். உப்பு, வெங்காயம், கொத்தமல்லி இலைகள் மற்றும் நறுக்கிய பச்சை மிளகாய் ஆகியவற்றைக் கலக்கவும். இப்போது எல்லாவற்றையும் நன்றாக மசித்து சாப்பிடவும். இது மிகவும் ஆரோக்கியமான பதார்த்தமாகும்.
நெல்லிக்காய்
நீரிழிவு நோயாளிகளுக்கு நெல்லிக்காய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றத்தை சரிசெய்யும் குரோமியம் இதில் உள்ளது. இதன் காரணமாக, கார்போஹைட்ரேட்டுகள் விரைவாக ஜீரணமாகின்றன மற்றும் இரத்த சர்க்கரை அதிகரிக்காது.
நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் சில ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இன்சுலின் உற்பத்தியை மேம்படுத்துகின்றன மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகின்றன. நெல்லிக்காயை வேகவைத்து வைத்துக் கொண்டு, அதிலுள்ள விதைகளை எடுத்துவிட்டு சதைப்பகுதியை மட்டும் எடுத்துக் கொள்ளவும். அதில் உப்பு கலந்து சாப்பிடவும். இரவில் இப்படி வேகவைத்த நெல்லிக்காயை சாப்பிட்டால், காலையில் இரத்த சர்க்கரை அளவும் சீராக இருக்கும்.
முருங்கைக்காய்
சர்க்கரை நோய்க்கு முருங்கைக்காய் நல்லது. முருங்கைக்காயை வேகவைத்து அதிலுள்ள சதைப்பகுதியை மட்டும் எடுத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. வேண்டுமானாலும் முருங்கைக்காயின் ஊனுடன் (சதைப்பகுதியுடன்) பாசிப்பருப்பை சேர்த்து கூட்டாக சமைத்தும் சாப்பிடலாம். இது, சர்க்கரை அளவைக் குறைப்பதோடு, வளர்சிதை மாற்றத்தையும் பராமரிக்கிறது.
நாவற்பழம்
சர்க்கரை நோய்க்கான பழம் நாவற்பழம். குக்கரில் நாவற்பழத்தை போட்டு ஒரு விசில் வரும் வரை வேகவைக்கவும். தண்ணீரை வடித்துவிட்டு, நாவல்பழத்திலுள்ள விதைகளை எடுத்துவிட்டு, அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து, உப்பு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து சட்னியாக எடுத்துக் கொள்ளலாம். இது உணவுக்கு முந்தைய சர்க்கரை அளவைக் குறைக்கும்.
மேலும் படிக்க...