கொரோனா போன்ற நெருக்கடிக் காலங்களில் ஆரோக்கியத்தைத் தக்கவைத்துககொள்ள பாரம்பரிய உணவுகளையே உண்ண வேண்டும் (Traditional Food) என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி அறிவுறுத்தியுள்ளார்.
தேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு, புதுக்கோட்டை பழைய அரசு தலைமை மருத்துவமனையில், இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது. இதனைத் துவக்கி வைத்து அவர் உரையாற்றினார்.
அவரது உரையில், பொதுமக்களுக்கு ஏற்படும் பல்வேறு வகையான நோய்களுக்கு சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சித்த மருத்துவ சிகிச்சை முறையில் எவ்வித பக்க விளைவுகளும் (No Side Effects) இல்லை.
கொரோனா தொற்று காலத்தில் மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சித்த மருத்துவ சிகிச்சை மையத்தின் மூலம் சிறப்பான சிகிச்சை அளிக்கப் பட்டு நோயாளிகள் குணப்படுத்தப்பட்டனர். சித்த மருத்துவ சிகிச்சையில் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன.
மேலும், நவீன வாழ்க்கை முறைகளில் பொதுமக்கள் நமது பாரம்பரிய உணவுகளை (Trational Food) உட்கொள்ள வேண்டும். உடல் நலத்திற்கு நன்மை தரும் பாரம்பரிய உணவுகளான கம்பு, கேழ்வரகு குதிரைவாலி போன்ற பல்வேறு உணவு பொருட்களை உட்கொள்ள வேண்டும். இதனால் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நோயற்ற நல்வாழ்வு வாழ முடியும். இவ்வாறு உமா மகேஸ்வரி தெரிவித்தார்.
இந்த முகாமில் மூலிகை கண்காட்சிக்கும், பாரம்பரிய உணவு கண்காட்சிக்கும் (Traditional Food Exhibition) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை ஏராளமானோர் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
மேலும் படிக்க...
டிராக்டருடன் கூடிய அறுவடை இயந்திரம்- விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் கிடைக்கும்!
துத்தநாக சத்துப் பற்றாக்குறையைப் போக்கும் ஜிங்க் சல்பேட்- விவசாயிகள் கவனத்திற்கு!