கோடை என்ற உடனேயே, அத்துடன் ஏற்படும் நீர்ச்சத்துக் குறைபாடுதான் நம் நினைவுக்கு வரும். வேறு எந்த நோயும் இல்லாத மனிதர்களும், உடலில் நீர்ச்சத்துக் குறைந்துவிட்டால், உடனடியாக மரணத்தை எதிர்கொள்ள நேரிடும். அந்த அளவுக்கு ஆபத்து நிறைந்தது இந்தக் கோடை காலம்.
வெளியே செல்ல வேண்டாம் (Do not go outside)
அதனால்தான் குறிப்பாகக் கத்திரி வெயில் காலங்களில், பகல் வேளைகளில் அத்யாவசியப் பணிகள் தவிர பிற பணிக்கான வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள்.
நீர்ச்சத்து நிறைந்தவை (Watery)
இது ஒருபுறம் என்றால், பின்வரும் பழங்களைத் தவறாமல் அதிக அளவு எடுத்துக்கொண்டால் உங்கள் உடலின் நீர்ச்சத்து நிறைந்திருக்க இவை வழிவகை செய்யும். அவை எந்த பழங்கள்? அதிக நீர்ச்சத்து கொண்ட பழங்களின் பட்டியல் இதோ!
வெள்ளரிக்காய் (Cucumber)
தர்பூசணியைவிட சிறந்தது. இதில் 96.7 சதவீதம் நார்ச்சத்து உள்ளது. அதுமட்டுமல்லாமல் வெள்ளரிக்காயில் உள்ள வைட்டமின்கள் நமது வளர்சிதை மாற்றத்தைச் சிறப்பாகச் செயல்படச் செய்கின்றன.
எலுமிச்சை (Lemon)
எலுமிச்சையில் 96.5 சதவீதம் நீர்ச்சத்து இடம்பெற்றுள்ளது. மேலும் இந்தப் பழத்தில் உள்ள சிட்ரிக் அமிலம், உள்ளுருப்புகளில் உள்ள புண்களை ஆறச்செய்வதோடு, செரிமானத்தையும் தூண்டுகிறது. நோய் எதிர்ப்புச் சக்திளையும் மேம்படுத்த அடித்தளம் அமைத்துக்கொடுக்கிறது.
தர்பூசணிப்பழம் (Water Melon)
தர்பூசணியில் 91.5 சதவீத நீர்ச்சத்து உள்ளது. கோடைக்கு ஏற்ற பழம் என்றால் தர் பூசணிதான். மேலும் இதில் இடம்பெற்றுள்ள நார்ச்சத்து செரிமானத்தையும் சிறப்பாக்குகிறது.
தக்காளி (Tomato)
தக்காளியில் 94.5 சதவீத நீர்ச்சத்து உள்ளது. மேலும் இதில் உள்ள வைட்டமின்கள் ரத்தத்தைப் பெருக்குகின்றன.
கேரட் (Carrot)
கேரட்டில் 90.4 சதவீத நீர்ச்சத்து உள்ளது. கேரட்டில் உள்ள கரோட்டினாய்டுகள் கண்களுக்கு மிகவும் நன்மை பயக்கக்கூடியவை.
காலிஃபிளவர் (Cauliflower)
காலிஃபிளவரில் 92.1 சதவீத நீர்ச்சத்து உள்ளது. இதில் உள்ள வைட்டமின் சத்துகள் வளரும் குழந்தைகளுக்கு ஏற்றவை.
புரோகோலி (Broccoli)
புரோகோலியில் 90.7 சதவீத நீர்ச்சத்து உள்ளது. எண்ணற்ற சத்துகளைக் கொண்டிருப்பதால், புரோகோலியை வளரும் குழந்தைகளுக்கு அதிக அளவு அளிப்பது மிகவும் நல்லது.
ஸ்ட்ராபெர்ரி (Strawberries)
ஸ்ட்ராபெர்ரியில் 90.7 சதவீத நீர்ச்சத்து உள்ளது. ரத்தத்தை அடர்த்தியாக்கும் இரும்புச்சத்து நிறைந்தது.
கீரைகள் (Greens)
கீரைகளில் 91.4 சதவீத நீர்ச்சத்து உள்ளது. மேலும், இதில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட வைட்டமின்கள் மற்றும் நுண்ணூட்டச்சத்துகள் உடலுக்கு மிகவும் அவசியமானவை.
கோடை காலத்தில் இந்த உணவுகளை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடலில் நீர்ச்சத்து எப்போதுமே நிறைந்திருக்கும். நாள்தோறும் அதிக உற்சாகத்துடனும், புத்துணர்வுடனும் இருக்க முடியும்.
மேலும் படிக்க...
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பனங்கிழங்கு சாப்பிடுங்கள்!
சந்தையில் விற்பனையாகும் போலி இஞ்சி- கண்டுபிடிக்க எளிய டிப்ஸ்!
பழுக்காத மாங்காய் ஜூஸ் குடிப்பதால், நமக்கு கிடைக்கும் பல்வேறு நன்மைகள்!