1. வாழ்வும் நலமும்

காய்கறிகளை சமைக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை

KJ Staff
KJ Staff

காய்கறிகளை சமைப்பதற்காக தயார் செய்யும் போதும், பின்னர்  சமைக்கும் போதும் அதிக அளவு சத்துக்கள் வீணாக்கப்படுகிறது. பழங்கள் மற்றும் காய்கறிகளின் மேல் தோலை நீக்கும் போது, தோலின் அடியில் உள்ள உயிர்ச்சத்துகளும் சேர்த்து நீக்கப்படுகிறது. அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உண்ணும் பகுதிகளான காரட் இலைகள், பீட்ரூட் இலைகள் மற்றும் முட்டை கோஸின் வெளிஉறை போன்றவை உணவு தயாரிக்கும் போது நீக்கப்படுவதால், சத்துக்கள் வீணாகிறது. உயிர்ச்சத்து B-பிரிவு வகைகள் போன்ற நீரில் கரையும் உயிர்சத்துக்கள், சமைத்த நீரைக் கொட்டுவதால் அவற்றுடன் வெளியேறுகிறது.

சோடியம், பொட்டாசியம், குளோரின் போன்ற தாது உப்புக்களும் சமைத்த நீரை பயன்படுத்தாததால் வீணாகிறது. நறுக்கிய பின்பு, காற்றுபட வைத்திருப்பதன் மூலம் ஆக்ஸிகரணமடைந்து, வைட்டமின் C வீணாகிறது. அஸ்கார்பிக் அமிலம் மற்றும் கரோட்டீன் போன்றவை நீரகற்றுதலின் போது வீணாகிறது. சமைத்தலின் போது சமையல் சோடா சேர்ப்பதால் B- பிரிவு உயிர்ச்சத்துக்கள் அதிக அளவில் குறைந்துவிடுகிறது.

சமைத்தலின் போது சத்துக்கள் குறைவதை தடுக்கும் வழிமுறைகள்

  • காய்கறிகளை வெட்டுவதற்கு முன்பு கழுவ வேண்டும். காய்கறிகளை ஊறவைக்கும் அல்லது கழுவும் நேரத்தை குறைத்தல் மூலம், அதிக அளவு சத்துக்கள் வீணாகாமல் தடுக்கலாம்.
  • காய்கறிகளை பெரிய துண்டுகளாக நறுக்குவதன் மூலம், உயிர்ச்சத்துகள் சமைக்கும் போதும், கழுவும் போதும் நீரில் கரைவது குறைக்கப்படுகிறது.
  • காய்கறிகளின் தோலை சீவுவதற்கு, தோல் சீவும் கருவியை (Peeler) பயன்படுத்தலாம். இதை பயன்படுத்தும் போது, மேற்புறத் தோலை மட்டும் நீக்குவதால், சத்துக்கள் வீணாவதில்லை. சமைப்பதற்குப் போதுமான அளவு நீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தண்ணீர் நன்றாக கொதித்த பின்பு, காய்கறிகளை போட்டு சமைப்பது நல்லது. காய்கறிகளை சமைப்பற்கு ஆவியில் வேகவைத்தல் (Steaming), அழுத்தக் கொதிகலன் முறை (Pressure cooker) போன்ற சமையல் முறைகளைப் பயன்படுத்தி, சத்துக்கள் வீணாகாமல் பாதுகாக்கலாம்.
  • காய்கறிகளை சமைக்கும் போது சமையல் சோடா உபயோகிப்பதை தவிர்த்தல் வேண்டும். இல்லையெனில், உணவிலுள்ள மிக அவசியமான உயிர்ச்சத்துக்களை இழக்க நேரிடும்.
  • காய்கறி சாலட், பரிமாறுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு தயாரிப்பதன் மூலம் ஊட்டச்சத்துகளின் இழப்பை தடுக்கலாம்.
  • சாலட் தயாரிப்பில் எலுமிச்சை சாறு அல்லது வினிகர் போன்ற அமிலங்களை சேர்ப்பதன் மூலம் காய்கறிகளிலுள்ள உயிர்ச்சத்து இழப்பு தடுக்கப்படுகிறது. ஏனெனில் உயிர்ச்சத்து அமிலங்களில் அழியாமல் நிலைத்திருக்கும்.
English Summary: Cooking methods to preserve nutrients in vegetables

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.