கோடைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், உடல்நலனை பேணுவது மிக அவசியம். உடல் வெப்பத்தை தவிர்க்க பானங்களை எந்தளவிற்கு அருந்துவதில் கவனம் செலுத்த வேண்டுமோ, அந்தளவிற்கு உடுத்தும் உடையிலும், அணியும் காலணிகளிலும் கவனம் செலுத்துவது அவசியமாகிறது.
நாம் அனைவரும் அழகாக இருக்க விரும்பினாலும், வெப்பமான காலநிலையில் சில ஆடைகள் நமக்கு அசௌகரியமாகவோ அல்லது ஆபத்தானதாகவோ இருக்கலாம். கோடை காலத்தில் தவிர்க்க வேண்டிய சில ஆடைகள், மற்றும் காலணிகள் குறித்த விவரங்களை இங்கு காணலாம்.
- செயற்கையான நூலிழைகளால் ஆன ஆடைகள் (Synthetic Fabrics)
பாலியஸ்டர், ரேயான் மற்றும் நைலான் போன்ற செயற்கை நூலிழைகளால் ஆன ஆடைகளை அணிவதைத் தவிர்க்கவும். ஏனெனில் அவை காற்று புழக்கத்தை ஆடையினுள் அனுமதிக்காது. இதனால் நீங்கள் சூடாகவும், அசௌகரியமாகவும் இருப்பதை உணர்கிறீர்கள். இந்த ஆடைகள் வியர்வையை உறிஞ்சி, உடல் துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றன. மேலும் தோல் எரிச்சலையும் உண்டாக்குகிறது.
- இறுக்கமான ஆடைகள் (Tight-Fitting Clothes)
ஜீன்ஸ் அல்லது லெகின்ஸ் போன்ற இறுக்கமான ஆடைகளை அணிவது உடல்நிலையை சூடாகவும் மற்றும் மூச்சுத் திணறலையும் ஏற்படுத்த வழிவகுக்கும். இறுக்கமான ஆடைகள் காற்று சுழற்சியை தடுக்கிறது மற்றும் தோல் எரிச்சல் மற்றும் வெடிப்புகளையும் ஏற்படுத்தும்.
- அடர் நிற ஆடைகள் (Dark-Colored Clothes)
பள்ளிகளில் நாம் Black body radiation பற்றி படித்திருப்பது உங்களின் ஞாபகத்தில் இருக்கலாம். கருப்பு, navy மற்றும் அடர் பழுப்பு (dark brown) போன்ற அடர் நிற ஆடைகள் வெப்பத்தை உறிஞ்சி உங்களை இன்னும் சூடாக உணரவைக்கும். இந்த நிறங்கள் சூரிய ஒளியை ஈர்க்கின்றன, இதனால் வெயிலின் தாக்கம் மற்றும் தோல் பாதிப்புக்கு உள்ளாக அதிக வாய்ப்புள்ளது.
- கனரக துணிகள் (Heavy Fabrics)
டெனிம் மற்றும் கம்பளி போன்ற கனமான துணிகள் பொதுவாகவே கோடைக்கு ஏற்ற ஆடை வகைகள் அல்ல. அவை வெப்பத்தை தாங்கினாலும், சுவாசிக்க முடியாது. இதனால் உங்களுக்கு அதிக வியர்வை ஏற்படுகிறது.
- ஃபிளிப் ஃப்ளாப்ஸ் (Flip Flops)
ஃபிளிப் ஃப்ளாப்கள் போன்ற மென்மையான ஆடைகள் மற்றும் காலணிகள் அணிவதற்கு வசதியாக இருந்தாலும், அவை உங்கள் கால்களுக்கு எந்த ஆதரவையும் பாதுகாப்பையும் அளிக்காது. வெப்பநிலை தாக்கத்தால் கால்கள், பாதங்களில் கொப்புளங்களையும் ஏற்படுத்தலாம். மேலும் நீண்ட காலத்திற்கு அவற்றை அணிவது கால் காயங்கள் மற்றும் வலிக்கு வழிவகுக்கும்.
- கனரக நகைகள் (Heavy Jewelry)
கோடை காலத்தில் கழுத்தணிகள், வளையல்கள், காதணிகள் போன்ற கனமான நகைகளை அணிவதைத் தவிர்க்கவும். அவை உங்களுக்கு அசௌகரியத்தையும் வியர்வையையும் உண்டாக்கும் மற்றும் தோல் எரிச்சலையும் ஏற்படுத்தும்.
கோடை மாதங்களில் வசதியான மற்றும் காற்று உட்புகும் ஆடைகளை அணிவது அவசியம். பருத்தி, கைத்தறி மற்றும் பட்டு போன்ற துணிகளைத் தேர்ந்தெடுங்கள், அவை காற்றை உட்புக அனுமதிக்கின்றன மற்றும் எடை குறைவாக இருக்கும். வெளிர் நிறங்களில் உள்ள தளர்வான ஆடைகள் உங்களை குளிர்ச்சியாகவும், சூரிய ஒளியில் இருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாக்கவும் உதவும்.
pic courtesy: pexels
மேலும் காண்க:
விவசாயிகளின் கவனத்திற்கு- கிரெய்ன்ஸ் இணையதளம் குறித்து A to Z தெரிஞ்சுக்கலாம் வாங்க..