நீரிழிவு நோய் பாதிப்பு தற்காலத்தில் பலருக்கும் இருக்கிறது. இந்த நிலையில், அதற்காக உணவுக் கட்டுபபாடுகள் என சொல்லி பலரும் பயமுறுத்துகின்றனர். அந்த வகையில் நீரிழிவு நோய் உள்ளவர்கள் உண்ணக் கூடிய பழங்கள் என்னென்ன என்பதைக் குறித்து இப்பதிவு வழங்குகிறது.
நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுவது குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட உணவுகளைத் தேர்ந்தெடுப்பதாகும். அதிலும், குறிப்பாக கிளைசெமிக் குறியீட்டில் குறைந்த பழங்களை உண்பதை தவிர்க்க வேண்டியதில்லை எனவும் கூறப்படுகிறது.
செர்ரிப் பழம்: செர்ரியில், ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. பொட்டாசியம், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த செர்ரிகளள், நோயெதிர்ப்பு அமைப்பு உடையது. மேலும், இது இதயத்திற்கு நன்மை பயக்கும் எனக் கூறப்படுகிறது.
ஸ்ட்ராபெர்ரி: அனைத்து பெர்ரிகளும் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது ஆகும். ஏனெனில் இவற்றில் மற்ற பழங்களை விட குறைவான சர்க்கரை மற்றும் நார்ச்சத்து அதிகம் இருக்கின்றன.
ஆரஞ்சு: ஆரஞ்சு நல்ல நார்ச்சத்து கொண்ட பழம் என்பதால், சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஆரஞ்சை சாப்பிடலாம் எனக் கூறப்படுகின்றது.
பேரிக்காய்: பேரிக்காய்களில் நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது என்பதோடு, உடல் எடையை குறைக்க உதவுகின்றது.
ஆப்பிள்: கிளைசெமிக் குறியீட்டு எண் 39 கொண்ட ஆப்பிள்கள் நார்ச்சத்து அதிகம் கொண்ட பழ வகைகளில் ஒன்று ஆகும்.
மேலும் படிக்க