தீபாவளிப் பண்டிகை (Diwali) வரவிருக்கும் நிலையில், விளக்குகளை ஏற்றி வைக்க மாட்டுச் சாணத்தில் (Cow sung), அகல் விளக்குகளை தயாரித்து வருகின்றனர் ஜெய்ப்பூரைச் (Jaipur) சேர்ந்த பெண்கள். மாசில்லா தீபாவளிக்குத் தயாராகும் வகையில், மாட்டுச் சாணத்தைப் பயன்படுத்தி அகல் விளக்குகளை, தயாரிக்கின்றனர். இதனால், சுற்றுச்சூழல் (Environment) மாசடைவதை தடுக்க இயலும். மேலும், பெண்களுக்கான புதிய வேலைவாய்ப்பும் உருவாகியுள்ளது.
இயற்கைப் பொருட்களின் பயன்பாடு:
பண்டிகை காலங்களில், சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் வகையில், இரசாயனத்தைத் தவிர்த்து, இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும் என சுற்றுச்சூழல் அமைச்சகம் (Ministry of Environment) முதல் சமூக அமைப்புகள் வரை வலியுறுத்தி வருகின்றன. நவராத்திரி மற்றும் வரவிருக்கும் தீபாவளிப் பண்டிகைக்கு, இயற்கை முறையில் மாட்டுச் சாணத்தைப் பயன்படுத்தி, அகல் விளக்குகளை தயாரித்து வருகின்றனர் ராஜஸ்தான் (Rajasthan) மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள்.
தூய்மையான மாட்டுச் சாணம்:
பாரம்பரிய மண் விளக்குகளைத் தவிர, சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத, மாட்டுச் சாணத்தால் தயாரிக்கப்படும் இதுபோன்ற விளக்குகளைப் பயன்படுத்த முன்வர வேண்டும். பிரதமர் நரேந்திர மோடியின் (Narendra Modi) உள்ளூர் தயாரிப்புகளின் முயற்சியாகவும், இந்த அகல் விளக்கு இருக்கும் என இப்பெண்கள் கூறியுள்ளனர். மேலும், எங்களது பாரம்பரிய மாட்டுச் சாணம் தூய்மையானது (Clean). ஒவ்வொரு நாளும் 100-க்கும் மேற்பட்ட பெண்கள், 1000-க்கும் மேற்பட்ட அகல் விளக்குகளை தயாரிக்கின்றனர். பண்டிகைகளைக் கொண்டாட, உள்ளூர்த் தயாரிப்புகளை மக்கள் பயன்படுத்தினால், இயற்கையும் காக்கப்படும் மற்றும் எங்களது வாழ்வாதாரமும் மேன்மை அடையும் என்று கூறியுள்ளனர்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க