Health & Lifestyle

Tuesday, 07 September 2021 10:24 AM , by: Elavarse Sivakumar

கொரோனா வைரஸ் தொற்றுக்கு தற்போது புதிய அறிகுறிகள் தோன்றுவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கோவிட் 19 (Covit 19)

சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் பரவிய கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ், இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, உட்பட பல்வேறு நாடுகளிலும் படிப்படியாகக் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.

கொரோனா வைரஸ் என்ற பெயரைக் கேட்டாலே அலறாத நாடு இல்லை என்றே சொல்லலாம். அந்தளவுக்கு பல்வேறு நாடுகளில் பொருளாதாரம் உள்ளிட்டவற்றில் கடும் பாதிப்புகளை கொரோனா தொற்று ஏற்படுத்தி விட்டது.

தடுப்பூசி (Vaccine)

இருப்பினும் இதனை எதிர்கொள்ள ஏதுவாக, கொரோனா வைரஸ் தொற்றுக்கு இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தடுப்பூசி கண்டுபிடித்து விட்டன. இதையடுத்து, உலகம் முழுவதும் பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன.

புதிய அறிகுறிகள் (New symptoms)

இந்நிலையில், மேலும் சில நோய் அறிகுறிகள் இருந்தால் அது கொரோனா தொற்றாக இருக்கலாம் என்று எச்சரிக்கை எழுந்துள்ளது. கொரோனா தொற்றின் பிரதான அறிகுறிகளான காய்ச்சல், சளி, இருமல், தொண்டைக்கட்டு, மூச்சுத் திணறல் ஆகியவை இல்லாவிட்டாலும், காது கேளாமை, பயங்கரத் தலைவலி, நாக்கு வற்றுதல் போன்றவை இருந்தால் உடனடியாக கொரோனா பரிசோதனை எடுக்க வேண்டும் என்று மருத்துவர்களுக்கு கொரோனா பணிக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கண் எரிச்சல் (burning eyes)

இது தொடர்பாக கொரோனா பணிக்குழவில் உள்ள மருத்துவ வல்லுனர்கள் கூறியதாவது:

காது கேளாமை, இமைப்படல அழற்சி, கண் எரிச்சல், கடுமையான களைப்பு, நாக்கு வறட்சி, எச்சில் ஊறுவதில் குறைவு, நீண்ட நேர தலைவலி, சருமக் கோளாறுகள் உள்ளிட்டவையும் கொரோனா தொற்றின் அறிகுறிகளாக இருக்கலாம்.

மருத்துவர்கள் தகவல் (Physicians information)

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் போது டெல்டா உருமாற்றத்தினால் நிறைய பேருக்கு உணவு குடல் பாதையில் அறிகுறிகள் தோன்றி உள்ளன. இதனால் வயிற்றுப் போக்கு, குமட்டல், வாந்தி, போன்றவையும் கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகள்தான்.
இவ்வாறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க...

நெருங்கும் கொரோனா 3- வது அலை- தடுப்பூசி போடாதவர்களுக்கு ஆபத்து!

அச்சச்சோ மீண்டும் கட்டுப்பாடுகளா? கொரோனாவை விரட்ட புதியத் திட்டம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)