கொள்ளிடத்தில், ஒரு கடைக்கு விற்பனைக்குக் கொண்டுவரப்பட்ட ஒரே காம்பில் 3 கத்திரிக்காயைக் கொண்ட அதிசயக் கத்திரிக்காயை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.
ஒரே பிரசவத்தில், ஒன்றுக்கும் மேற்பட்ட பிறப்பு நிகழ்வது எப்படி அதிசயமோ, அதேபோல, எப்போதாவது, காய்கறிகளும், ஒரே காம்பில், ஒன்றுக்கும் மேற்பட்டவை உருவாகும். அப்போது அவை அதிசயக் காயாகக் கருதப்படும்.
அந்த வகையில், மயிலாடுதுறையில் விற்பனைக்கு வந்த ஒரு கத்திரிக்காய் அதிசக் கத்திரியாக மாறியுள்ளது.
காய்கறி வரத்து
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்திற்கு கும்பகோணம் பகுதியில் இருந்து தினமும் லாரிகள் மூலம் காய்கறிகள் விற்பனைக்குக் கொண்டு வருவது வழக்கம்.
ஒரே காம்பில் 3 கத்திரி (3 eggplants in one stalk)
அதன்படி கொள்ளிடத்தில் உள்ள ஒரு கடைக்கு நேற்று முன்தினம் விற்பனைக்காக வந்த கத்திரிக்காய் வித்தியாசமாக இருந்தது. அதாவது ஒரே காம்பில் மூன்று கத்திரிக்காய்கள் இருந்தன.
பொதுமக்கள் வியப்பு (The public was amazed)
இந்த கத்தரிக்காய் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்ததால் அந்த கத்திரிக்காய்யை கடையில் காட்சி பொருளாக வைத்துள்ளனர். மேலும் அந்த கத்திரிக்காய்யை காய்கறி வாங்க வரும் அனைத்து பொதுமக்களும் அதிசயமாகப் பார்த்து செல்கின்றனர்.
அதிர்ஷ்டம் (Good luck)
ஒரே காம்பில் மூன்று கத்திரிக்காய் இருப்பதால் இது அதிசயமானது என்றும், சிவனுக்கு மூன்று கண்கள் இருப்பது போல் கத்திரிக்காயும் மூன்றாக இருப்பதால் அதிர்ஷ்டமானது என்று கூறி வருகின்றனர்.
மேலும் படிக்க...
கோரை சாகுபடி தீவிரம்! விவசாயிகள் வாழ்வாதாரத்தை காக்க கோரைப்பாயை பயன்படுத்துவோம்!
ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ரூ.41¼ லட்சத்துக்கு விவசாய விளைபொருட்கள் ஏலம்!
இயற்கை பூச்சி விரட்டி தயாரிப்பு குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்க பயிற்சி!