தமிழகத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் காய்கறிகள், பழங்கள், மலர்கள் உள்ள தோட்டக்கலை பயிர்களுக்கு அரசு மானியம் வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பட விரும்ப அவர்கள் இணையதளம் வாயிலாக பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மானியம் (Subsidy)
தமிழகத்தில் வேளாண் தொழிலை ஊக்குவிக்கும் வகையிலும் விவசாயிகளுக்கு உதவும் நோக்கிலும் அரசு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக விவசாயிகள் முக்கிய பணிகளை மேற்கொள்ள அரசு சார்பாக குறிப்பிட்ட தொகை மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதிய மின் மோட்டார் வாங்குவதற்கு விவசாயிகளுக்கு ரூ. 10,000 மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
அதனைத் தொடர்ந்து தற்போது காய்கறிகள், பழங்கள் மலர்கள் போன்ற தோட்டக்கலை பயிர்களுக்கு 40% மானியம் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் வேளாண் இடுபொருள்களை வாங்க உதவும் வகையில் இந்த தொகை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து நுண்ணீர் பாசன திட்டத்திற்காக சிறு, குறு விவசாயிகளுக்கு 100% மானியமும் பிற விவசாயிகளுக்கு 70% மானியமும் அரசால் வழங்கப்படுகிறது.
தோட்டக்கலை விவசாயிகள்
இதனை பெற விரும்பும் விவசாயிகள் சொந்தமாக நிலம் வைத்திருக்க வேண்டும் அல்லது 10 ஆண்டு காலத்திற்கு நிலத்தை குத்தகைக்கு பதிவு செய்தவராக இருக்க வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் மானியம் பெற விரும்பும் விவசாயிகள் என்ற https://www.tnhorticulture.tn.gov.in/tnhortnet/login.php என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் படிக்க
நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவு அதிகரிப்பு: விவசாயிகளுக்கு பலன் அளிக்குமா?
PM Kisan நிதி 6,000 ரூபாய் தேவையில்லையா? வரவிருக்கும் மத்திய அரசின் புதிய அம்சம்!