1. செய்திகள்

PM Kisan நிதி 6,000 ரூபாய் தேவையில்லையா? வரவிருக்கும் மத்திய அரசின் புதிய அம்சம்!

R. Balakrishnan
R. Balakrishnan
PM Kisan

பிரதம மந்திரி – கிசான் திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் விவசாயிகள், தங்களுக்கு நிதி உதவி தேவையில்லை என்று தெரிவிப்பதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய வேளாண் துறை அமைச்சகம் வெளியிட்டுளளது.

பிஎம் கிசான் (PM Kisan)

நாட்டில் வேளாண் உற்பத்திக்கான செலவுகளை ஈடு செய்யும் வகையில், பிரதம மந்திரி – கிசான் திட்டம் கடந்த 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் கீழ், நிலமுள்ள விவசாய குடும்பங்களுக்கு நான்கு மாதத்திற்கு ஒரு முறை தலா ரூ.2000/- வீதம் மூன்று தவணைகளில் ஆண்டுக்கு ரூ.6,000/ வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை இத்திட்டத்தின்கீழ் இணைந்த பயணாளிகளுக்கு 12 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன.

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் தகுதியான பயனாளிகள், தங்களுக்கு பிம் கிசான் தவணை நிதி வேண்டாம் என்று தாங்களாக முன்வந்து கூறும் வாய்ப்பை (PM Kisan benefit surrender Scheme) மத்திய வேளாண் துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய திட்ட நடைமுறைகளின்படி, "தற்போது இத்திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் விவசாயிகள் மட்டுமே நிதி வேண்டாம் என்ற வாய்ப்பை தேர்ந்தெடுக்க முடியும். மேலும், இந்த தன்னார்வலர்கள் தாங்கள் முந்தைய தவணைகளில் பெற்ற நிதியை சமர்ப்பிக்க வேண்டியதில்லை" என்று தெரிவிக்கப்பட்டுளளது.

நிதி உதவி ஒப்படைப்பு

அதன்படி பி.எம்.கிசான் வலைதளத்தில், surrender PM Kisan benefit என்ற புதிய பகுதி உருவாக்கப்படும். ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசியில் பெறப்படும் நான்கு இலக்க OTP எண்ணை சமர்ப்பிப்பது மூலம் உங்களுக்கான நிதி உதவியை ஒப்படைக்கலாம். நித உதவியை ஒப்படைத்த விண்ணப்பதாரர்களுக்கு, " வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டீர்கள். இந்த தேசம் உங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறது" என்ற குறுந்தகவல் உங்கள் திரையில் தோன்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

வேலை இல்லாத இளைஞர்களுக்கு ரூ.6000 இலவசம்: சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான செய்தி!

வேளாண் பட்ஜெட்: விவசாயிகள் கருத்து தெரிவிக்க தமிழக அரசு அழைப்பு!

English Summary: No need for PM Kisan Fund 6,000 rupees? The new feature of the upcoming central government! Published on: 23 February 2023, 08:19 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.