அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய உள்ள வழிகள் என்ன? நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் மக்காச்சோள சாகுபடி சிறப்புத் திட்டம்- விவசாயிகளுக்கு ரூ.6000 மதிப்பிலான தொகுப்பு! கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 2 July, 2021 9:38 AM IST

உர விற்பனை நிலையங்கள், ஒரே நபரின் பெயரில் அதிகப் படியாக விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சில்லரை விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திடீர் ஆய்வு (Sudden study)

மதுரை மாவட்டத்தில், வேளாண்மை இணை இயக்குநர் த.விவேகானந்தன் ஆலோசனையின் பேரில் மேலூர் மற்றும் கொட்டாம்பட்டி வட்டாரங்களில் செயல்பட்டு வரும் உர விற்பனை நிலையங்களில் வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் வேளாண்மை அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அதிரடி ஆய்வு (Action study)

ஆய்வின் போது உர விற்பனை நிலையங்களில் இருப்பு மற்றும் விலை விபரப்பட்டியல், கொள்முதல் பட்டியல்கள், இருப்புப் புத்தகம், உர இருப்பு மற்றும் விற்பனை இரசீது ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது.

விற்பனைக்குத் தடை (Prohibition on sale)

மேலும், அசல் இருப்பிற்கும், புத்தக இருப்பிற்கும் வேறுபாடு இருந்ததால் 3550 கிலோ உரங்களுக்கு விற்பனைத் தடை விதிக்கப்பட்டது.

உர மாதிரிகள் சேகரிப்பு (Collection of fertilizer samples)

மேலும் இருப்பில் இருந்த உரங்களிலிருந்து, தரப்பரிசோதனைக்காக உர மாதிரிகள் சேகரிக்கப் பட்டன.

எழுதி வைக்க வேண்டும் (To be written down)

ஒவ்வொரு உர விற்பனை நிலையத்திலும் உர இருப்பு மற்றும் விலை விபரங்களை விவசாயிகளின் பார்வைக்குப் படும்படி, எழுதி வைக்க வேண்டும்.

உரிமம் ரத்து (License revoked)

ஒரே நபரின் பெயரில் அதிகப் படியாக விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சில்லரை விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும்.

விற்பனை கூடாது (Not for sale)

மொத்த உர விற்பனையாளர்கள் வெளி மாவட்டங்களுக்கு உரங்களை மாற்றம் செய்யவோ, விற்பனை செய்யவோ கூடாது. விவசாயம் செய்யாத நபர்களுக்கு உரங்களை விற்பனை செய்யக்கூடாது. விவசாயிகள் உரம் வாங்கச் செல்லும் போது, ஆதார் அட்டையுடன் செல்ல வேண்டும்.

கடும் நடவடிக்கை (Heavy action)

மேலும் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்பனை செய்தாலோ, உரிய உரிமம் இன்றி விற்பனை செய்தாலோ, நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லரை விலைக்கு மேல் பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்பனை செய்தாலோ அவர்கள் மீது பூச்சிக்கொல்லி மருந்து சட்டப்படி, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

புகார் தெரிவிக்க (Report a complaint)

உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து விலை மற்றும் தரம் குறித்து புகார் இருந்தால், இருப்பின் வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு - 97516 23274 மற்றும் வேளாண்மை அலுவலர் (தரக்கட்டுப்பாடு - 98940 65925 ஆகியோர்களைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என வேளாண்மை இணை இயக்குநர் த.விவேகானந்தன் தெரிவித்தார்.

மேலும் படிக்க...

நிலையான வருமானம் தரும் மண்புழு உரம்! தயாரிப்பது எப்படி?

விரைவில் நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!!

English Summary: Action order for fertilizer outlets!
Published on: 01 July 2021, 09:59 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now