பயிர்களின் வளர்ச்சியைத் தூண்டி, அவற்றின் செயல்பாட்டைத் துரிதப்படுத்துவதில் லேக்டிக் அமில பாக்டீரியா ரசம் (lactic acide bacteria Solution) பெரும் பங்கு வகிக்கிறது. அளப்பரிய பயனளித்து, விவசாயிகளுக்கு வாழ்வளிக்கும் இந்த ரசத்தை நாமே தயாரித்துக்கொள்ளலாம்.
-
தயாரிக்கும் முறை
-
தேவையான பொருட்கள்
-
அரிசி அலம்பிய கழுநீர்
-
நாட்டு மாட்டுப்பால்
-
வெல்லம்
செய்முறை
Step 1 : அரிசி அலம்பிய கழுநீரை மூடியுடன் கூடிய ஒரு பாத்திரத்தில் பாதி அளவுக்கு நிரப்பி காற்று பத்திரத்திற்குள் வந்து செல்ல ஏதுவாக லேசாக மூடி வைக்க வேண்டும்.
Step 2 :அறையின் வெப்பநிலை 20 முதல் 25 டிகிரி செல்சியஸாக இருக்க வேண்டும்.
Step 3 :எழு நாட்களில் இந்த நீர் புளித்து அதில் இருந்த உமி பிரிந்து, மேற்பரப்பில் ஆடை போல படர்ந்து இருக்கும். அதை ஒரு வடிகட்டி மூலம் அகற்றி விட வேண்டும்.
Step 4 :வடித்து வைத்திருக்கும் புளித்த நீரில் அதைப்போல பத்தை மடங்கு பசுமாட்டுப்பாலை (Ten fold Milk) சேர்த்துக்கலந்து ஒரு பாத்திரத்தில் மூடி வைக்க வேண்டும்.
Step 5 : அடுத்த எழு நாட்களில் இந்தக் கலவையில் மாவு புரதம் மற்றும் கொழுப்பு சத்துகள் தனியாக பிரிந்து மேலே ஆடை போல மிதக்கும்.
Step 6 :கெட்டு தட்டி போன மாவு, புரதம் மற்றும் கொழுப்பு பொருட்களை நீக்கினால் மஞ்சள் வண்ணத்தில் ஒரு திரவம் கிடைக்கும்.
Step 7 : இந்த திரவத்தில் அதன் அளவில் மூன்றில் ஒரு பங்கு வெல்லத்தை கலந்து முடி வைக்கவும்.
இந்த கலவை அறை வெப்பத்திலேயே கெட்டு போகாமல் இருக்கும். இதுதான் லேக்டிக் அமில பாக்டீரியா ரசம்.
உபயோகிக்கும் அளவு (using quantity)
100 மில்லி ரசத்திற்கு இரண்டு லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து உபயோகிக்கலாம் நாட்டு பசுமாட்டு பால் சிறந்த பலனை தரும். குளோரின் தண்ணீர் உபயோகிக்கக்கூடாது. இந்தக் கலவை மிக்சிறந்த பயிர்ஊக்கியாக செயல்படும்.
மேலும் படிக்க....
மாடு வளர்க்க மலைப்பாக இருக்கா- சற்று மாற்றி யோசிங்க!
அம்மை நோயில் இருந்து கோழிகளைப் பாதுகாப்பது எப்படி? இயற்கை முறை மருத்துவம்!