1. கால்நடை

அம்மை நோயில் இருந்து கோழிகளைப் பாதுகாப்பது எப்படி? இயற்கை முறை மருத்துவம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar

கோழிகளைத் தாக்கும் நோய்களில் ஒன்றான அம்மை நோயை, இயற்கை மருத்துவம் மூலம் எளிதில் குணப்படுத்த முடியும்.

அறிகுறிகள் (Symptoms)

  • பாதிக்கப்பட்ட கோழி உடல் சோர்ந்து காணப்படும்.

  • கொண்டை, கண் இமை, செவி மடல், கால் மற்றும் நாசிப்பகுதிகளில் கொப்பளங்கள் உருவாகும்.

  • வாய் மற்றும் தொண்டைப் பகுதியில் புண்கள் ஏற்படுதல்.

  • முட்டை உற்பத்தி 25% வரைக் குறையும்.

  • முற்றிய நிலையில் தீவனம் உண்ணாமல் இறந்துவிடும் நிலையும் ஏற்படலாம்.

அம்மை நோய் மருத்துவம் (Measles medicine)

தேவையான பொருட்கள்

வேப்பங்கொழுந்து      -1 கைப்பிடி
விரலி மஞ்சள்             - 2 கைப்பிடி

இவை இரண்டையும் நன்கு அரைத்து அதன் சாற்றை எடுத்து பிழிந்து, 1 முதல் 4 சொட்டுகள் வரை, கோழிகளுக்கு வாய் வழியாகக் கொடுக்கவும்.அரைத்த விழுதை வேப்ப எண்ணையில் கலந்து கொப்பளங்கள் மீது தடவவேண்டும்.

வேப்ப இலை மற்றும் வேப்பக் குச்சிகளைப் போட்டு ஊறவைத்த தண்ணீரையேக் குடிக்க கொடுக்க வேண்டும். பண்ணை முழுவதும் தெளிக்க வேண்டும்.

Credit : You tube

கோழி அம்மை மருந்து (வாய்வழிகொடுப்பது)

(10 கோழிகளுக்கு)

தேவையானப் பொருட்கள்

சீரகம்         - 10 கிராம்
மிளகு         - 5 எண்ணிக்கை
மஞ்சள்       - 5 கிராம்
வேப்பிலை  - 10 இலைகள்
துளசி          - 10 இலைகள்
பூண்டு        - 5 பல்

இவற்றை அரைத்து அரிசிக் குருணையில் கலந்துகொடுக்கவும். அல்லது சிறு உருண்டைகளாகக் கொடுக்கவும்.

10 கோழிகளுக்கு வெளிப்பூச்சுக்கு

தேவையானப் பொருட்கள்

சீரகம்            - 20 கிராம்
மஞ்சள்          - 10 கிராம்
வேப்பிலை    - 50 கிராம்
துளசி            - 50 கிராம்
பூண்டு           - 10 பல்
சூடம்             - 5 கிராம்

விளக்கெண்ணைய் அல்லது வேப்ப எண்ணைய் - 100 மில்லி லிட்டர்
அரைத்த விழுதை எண்ணையில் கலந்து பாதிக்கப்பட்ட இடங்களில் பூசி வர அம்மை நோய் விரைவில் குணமடையும்.

மேலும் படிக்க...

செடியில் புழுத்தாக்குதலைக் புரட்டிப்போடும் இஞ்சி-பூண்டு- மிளகாய்க் கரைசல்!

பட்டுப் புழு வளர்ப்பை அதிகரிக்க மத்திய அரசின் திட்டம் - தேனி விவசாயிகளுக்கு வாய்ப்பு

English Summary: Ways to protect chickens from measles - How to prepare in a natural way?

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.