மயிலாடுதுறை மாவட்டத்தில், குறுவைத் தொகுப்புத் திட்டத்தில் மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இரா. லலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
2 லட்சம் வரை மானியம் (Grant up to Rs.2 lakh)
2021-2022 நிதியாண்டில் மயிலாடுதுறை மாவட்டத்துக்குக் குறுவைத் தொகுப்புத் திட்டத்தில், விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள், மானிய விலையில் வழங்கப்பட உள்ளன.
அதன்படி அதிகபட்சமாக சிறிய நெல் நாற்று நடவு செய்யும் இயந்திரங்களுக்கு ரூ.1.50 லட்சமும் பெரிய நெல் நாற்று நடவு செய்யும் இயந்திரங்களுக்கு ரூ.5 லட்சமும், வைக்கோல் கட்டும் கருவிகளுக்கு ரூ.2லட்சமும் மானியமாக வழங்கப்பட உள்ளது.
பின்னேற்பு மானியம் (Compensation grant)
இதேபோல், களையெடுக்கும் இயந்திரங்களுக்கு ரூ.35 ஆயிரமும் கூட்டு நெல் அறுவடை இயந்திரங்களுக்கு ரூ.11 ஆயிரமும் அரசு சார்பில் மானியமாக வழங்கப்படும்.
இத்திட்டத்தில், சிறு, குறு ஆதிதிராவிட மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியம், இதர விவசாயிகளுக்கு 40 சதவீத மானியம் அல்லது அரசால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச மானியம், பின்னேற்பு மானியமாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரைவு வைக்கப்படும்.
எந்தெந்த இயந்திரங்கள் (What machines)
தற்போது இந்தத் திட்டத்தில், தனிப்பட்ட விவசாயிகள் வேளாண் இயந்திரங்களை மானியத்தில் பெற பொதுப்பிரிவினருக்கு சிறிய நெல் நாற்று நடவு இயந்திரங்களின் எண்ணிக்கை 8, பெரிய நெல் நாற்று நடவு இயந்திரங்கள் ஒன்று, வைக்கோல் கட்டும் கருவிகள் 8, களையெடுக்கும் இயந்திரங்கள் 8, கூட்டு நெல் அறுவடை இயந்திரங்கள் 5 என மொத்தம் 30 இயந்திரங்கள் ரூ.90 லட்சம் மானியத்தில் வழங்கப்பட உள்ளது.
ரூ.28 லட்சம் மானியத்தில் (In a grant of Rs. 28 lakhs)
இதேபோல் சிறப்பு பிரிவினருக்கு, சிறிய நெல் நாற்று நடவு இயந்திரங்கள் 3, வைக்கோல் கட்டும் கருவிகள் 6 மற்றும் கூட்டு நெல் அறுவடை இயந்திரம் 1 என மொத்தம் கூடுதலாக 10 இயந்திரங்கள் ரூ.28 லட்சம் மானியத்தில் வழங்கப்பட உள்ளன. இதன்படி நடப்பு ஆண்டில் மொத்தம் ரூ.1.18 கோடி மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உழவன் செயலி (Plow processor)
இதில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், தங்கள் விண்ணப்பத்தை உழவன் செயலியில் பதிவு செய்து வேண்டியது அவசியம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க...