ஈரோடு மாவட்ட விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோருக்காக, காளான் வளர்ப்பு பற்றிய இணையவழிக் கருத்தரங்கம் இன்று நடைபெறுகிறது.
பயிற்சி பெற வாய்ப்பு (Opportunity to train)
இதில் அனைத்து விவசாயிகளும் கலந்துகொண்டுப் பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பல நன்மைகள் (Many benefits)
உடல் நலத்திற்கு வித்திடும் உணவுகளில் காளானும் ஒன்று. பல நன்மைகளை அளிக்கும் காளானை வளர்த்து விற்பனை செய்தவதன் மூலம் நல்ல வருமானமும் ஈட்ட முடியும். குறிப்பாக விவசாயிகள் இதைப் பகுதிநேரப் பணியாகவும் மேற்கொண்டுப் பயனடையலாம்.
இணையவழி கருத்தரங்கம் (Online Seminar)
இதனைக் கருத்தில்கொண்டு, காளான் வளர்ப்பு குறித்த இணையவழிக் கருத்தரங்கம், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள MYRADA வேளாண் அறிவியல் நிலையத்தில் இன்று காலை நடைபெறுகிறது
இந்தக் கருத்தரங்கில், அனைத்து விவசாயிகளும் இணையதளம் மூலம் கலந்துகொள்ளலாம்.
நடைபெறும் நாள் (The day of the event)
இன்று(ஜூன் 22)
நேரம் (Training time)
காலை 11 மணி முதல் பகல்1.00 மணி வரை
விவாதிக்கப்படும் தலைப்புகள் (Topics discussed)
இந்தக் கருத்தரங்கத்தில் இலாபகரமான காளான் வளர்ப்பு- சாதகங்களும், சவால்களும் என்றத் தலைப்பில் எல்லிஸ் பயோடெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர்.எஸ்.அரவிந்த் தொழில்நுட்ப விளக்கவுரை ஆற்றுகிறார்.
விஞ்ஞானிகள் பங்கேற்பு (Participation of scientists)
இதில் MYRADA வேளாண் அறிவியல் நிலையத்தின் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் டாக்டர். பி.அழகேசன் துவக்க உரை ஆற்றுகிறார். ஈரோடு மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை துணை இயக்குநர் திருமதி.பி. தமிழ்செல்வி அவர்கள் வாழ்த்துரை வழங்குகிறார்.
விருப்பமுள்ளவர்கள் இணையம் மூலம் இணைந்து பயிற்சி பெற்றுக்கொண்டுப் பயனடையலாம்.
Join with Zoom Meeting
கீழே உள்ள லிங்க்-கைப் பயன்படுத்திக்கொள்ளலாம்
https://us02web.zoom.us/j/6689229190?pwd=eVBiU1RaZHZ6eThvb3lqd0FaT1JGZz09#success
Meeting ID : 668 922 9190 Passcode : 2HMfYF
இணைந்து ஏற்பாடு (Arranged together)
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகமும் , MYRADA வேளாண் அறிவியல் நிலையமும், இணைந்து இந்த இணையவழி கருத்தரங்கம் மற்றும் பயிற்சியை நடத்துவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
தர்பூசணி விற்பனை செய்ய முடியவில்லை: வயலுக்கே உரமாகும் அவல நிலை!
விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்: தஞ்சை கலெக்டர் பேட்டி