1. தோட்டக்கலை

தஞ்சையில் நடவுப் பணிகள் தீவிரம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Intensity of planting work in Tanjore!
Credit : Newsj

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில், தஞ்சை மாவட்டத்தில் நடவுப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

3 போக நெல் சாகுபடி (3 Go paddy cultivation)

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என மூன்று போக நெல் சாகுபடி நடைபெறும்.

ஜூன் 12ந் தேதி (Dated June 12th)

இதற்காக ஒவ்வொரு ஆண்டும், ஜூன் மாதம் 12ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்குத் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

சாகுபடி பரப்பு  அதிகரிப்பு (Increase in cultivation area)

மேட்டூர் அணையில் உரியு அளவு தண்ணீர் இல்லாவிட்டால் தாமதமாக அணைத் தாமதமாகத் திறக்கப்படும். குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும்.

சம்பா சாகுபடி (Samba cultivation)

தாமதமாகத் திறக்கப்பட்டால், குறுவை சாகுபடி பரப்பளவு குறைந்து சம்பா சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும்.

குறுவை சாகுபடி (Cultivation of kuruvai)

அதன்படி கடந்த 8 ஆண்டுகளுக்குப் பின் கடந்த ஆண்டு ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டதால் குறுவை சாகுபடி நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் நடந்தது.

கூடுதலாக சாகுபடி (In addition cultivation)

அதாவது வழக்கமாக மேற்கொள்ளப்படும் பரப்பளவை விட 37 சதவீதம் கூடுதலாகக் குறுவை சாகுபடி நடந்தது. அதன்படி இந்த ஆண்டும் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை கடந்த 12ந் தேதி திறக்கப்பட்டது.

கல்லணைக்கு வந்தது (Reached Kallanai)

  • இந்த தண்ணீர் கல்லணையை 16ந் தேதி வந்தடைந்ததும் அங்கிருந்து டெல்டா பாசனத்திற்குக் காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆறுகளில் திறந்து விடப்பட்டது.

  • அதன்படி தற்போது காவிரி மற்றும் வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஆறுகளில் தண்ணீர் பாய்ந்தோடி வருகிறது.

  • தஞ்சையை அடுத்த வெண்ணாற்றில் பள்ளியக்ரஹாரத்தைத் தாண்டி தண்ணீர் சென்ற வண்ணம் உள்ளது.

சாகுபடி இலக்கு (Cultivation target)

தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு ஒரு லட்சத்து 5 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இதற்காக விதைகள் மற்றும் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

நடவுப் பணிகள் (Planting works)

பல்வேறு இடங்களில் நடவு பணிகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தஞ்சை மாவட்டத்தில் காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஆறுகளின் கரையோரங்களில் தற்போது சாகுபடி பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

நாற்றுகள் தயார் நிலை (Preparation stage of seedlings)

இப்பகுதிகளில் ஏற்கனவே நாற்றுகள் விடப்பட்டு தயார் நிலையில் இருந்ததால் தற்போது நடவு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதரப் பகுதிகளில் நாற்றங்கால் தயாரிக்கும் பணிகளும், நடவு பணிகளும் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

மன அழுத்தத்தை குறைக்கிறது விட்டமின் சி நிறைந்த பழங்கள்

வறட்சியிலும் நாவல் பழம் விளைச்சல்! விவசாயிகள் மகிழ்ச்சி!

 

English Summary: Intensity of planting work in Tanjore! Published on: 21 June 2021, 06:59 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.